அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? இழப்பு என்பது இதுவும் கடந்து போகும் என்று எளிதாக சொல்லிவிட்டு கடந்து போகக்கூடியதல்ல. ஆறா ரணத்தைக் கொடுக்கக் கூடியது. நினைவுகள் நம்மைவிட்டு அகலாது. எங்கோ ஒரு மூலையில் நம்மோடு பயணித்துக் கொண்டே இருக்கும். மறந்தது போல இருக்கும். ஆனால் மறக்காது. அவர்கள் இருந்த இடத்தைப் பார்க்கும்போது அப்படியே கலங்கிப் போவோம். அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் வீட்டில் இருந்து அவர்களை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். அவர்களோடு பழகிய நாட்களில் பேசிய பேச்சு நினைவில் வந்து தூங்கவிடாமல் செய்யும். இவை யாவும் மறுபடியும் மறுபடியும் நினைவுபடுத்திக் கொண்டேதான் இருக்கும். இப்படித்தான் ஒரு புலவருக்கு ஒரு மன்னன் இறந்துபோன பின்னர் மன்னனின் நினைவு வந்து மிகவும் கலக்கத்தைத் தந்து கொண்டே இருக்கிறதாம். அந்த நினைவை கவிதையில் சொல்லியிருக்கிறார். அந்த நினைவை நம் கண்முன் கொண்டு வருவதற்காக அவர் உயிரோட்டமுள்ள இன்னொரு கதையைச் சொல்லியிருக்கும் விதம் நம்மையும் கண் கலங்க வைக்கிறது. அது என்னவென்று பார்ப்போம். வாருங்கள். " பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த பெருங்க...