Posts

Showing posts with the label அவமானம் தந்த வெகுமானம்-தன்னம்பிக்கை கட்டுரை

அவமானம் தந்த வெகுமானம்

அவமானம் தந்த வெகுமானம் கிண்டலும் கேலியும் நக்கலும் நையாண்டியும் செய்து பிறர் மனதைக் காயப்படுத்துவதற்கு என்றே சிலர் அலைந்து கொண்டிருப்பர். அது அவர்கள் குணமா அல்லது அவர்கள் வேண்டுமென்றே நடத்தும் செயலா என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். எது எப்படியோ அவர்கள் செய்யும் கிண்டலால் யாரோ ஒருவர் காயப்படுகிறார்...இல்லை..இல்லை அவமானப்படுத்தப் படுகிறார் என்பதுதான் உண்மை. கொல்லும் சொல்லைக் கையில் எடுத்து பேசுவதால் எத்தனை எத்தனை தற்கொலைகள் நாளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. வாழ வழி இல்லையே எனத்  தற்கொலை செய்து கொள்ளுபவர்களைவிட என்னை அவமானப் படுத்திவிட்டார்களே என்று தற்கொலை  செய்பவர்கள்தான் அதிகம். நான் என்ன அப்படி பெரிசாக சொல்லி விட்டேன்...என்பது சொல்லியவர்கள் தரப்பு வாதமாக இருக்கலாம். அவமானப்பட்டவர்களுக்கு அல்லவா தெரியும் அதன் வலியும் வேதனையும். அப்படியே நெஞ்சைப் பிடுங்கி வெளியே  வீசுவதுபோல இருக்கும்.  . உயர் பதவிக் கிடைத்துவிட்டால் தமக்குக் கீழ் வேலை பார்க்கும் நபர்களை அற்பப் புழுக்களாக எண்ணி அவமானப்படுத்தும் அதிகாரிகள் உண்டு. சிலர் எப்போதெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்குமோ ...