பெரிதினும் பெரிது கேள்
பெரிதினும் பெரிது கேள் "கற்றலினாயினும் கேட்க" என்றார் வள்ளுவர். கற்றலினும் கேட்டல் நன்று. ஆனால் என்ன கேட்க வேண்டும்? எப்படிக் கேட்க வேண்டும்? எதைக் கேட்க வேண்டும்? யார் சொல்வதைக் கேட்க வேண்டும்? இப்படி பல கேள்விகள் முன்வந்து நின்று விடை கேட்டு நிற்கும். இவை எல்லாவற்றிற்கும் நல்லதைப் கேட்க வேண்டும் என்று சொல்லி கடந்து போய்விடுவோம். ஆனால் பாரதி கேட்டல் எப்படி இருக்க வேண்டும் என்று மாறுபட்ட கோணத்தில் சிந்தித்திருக்கிறார். அதனால் நமது அனைத்துக் கேள்விகளுக்கும் ஒற்றை வரியில் விடை தந்துவிட்டார். "பெரிதினும் பெரிது கேள்" அருமையான பதில். யாரும் எதிர்பார்க்காத பதில். என்ன பெரிதாக கேட்க வேண்டும்? உனக்கு என்ன தேவையோ அது இதுவரை இல்லாததாக இருக்க வேண்டும். அதைக் கேள். இதுதான் இந்தப் பெரிதினும் பெரிது கேள் என்பதற்கான பொருளாக இருக்க வேண்டும். ஆனால் இந்தக் கேட்டல் ஆளாளாளுக்கு வேறுபடலாம். அவர்களுடைய கருத்து நமக்கு ஏற்புடையதாகவும் இருக்கலாம். அல்லாததாகவும் இருக்கலாம் . அவரவர் மனதில் பட்டபடி முன்னூற்று அறுபது பாகையிலிருந்தும் விமர்சனங்களையும் கருத்துக்களையும் பொருளையும்...