நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்....
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்.... நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றார் ஆதல் கடை" குறள் : 998 நண்பு - நட்பு ஆற்றார் - கொள்ளாதவர் ஆகி - ஆய் நயம் - இனிமை , இரக்கம் இல் - இல்லாதவற்றை செய்வார்க்கும் -செய்பவர்க்கும் பண்பு - பண்போடு ஆற்றார் - ஒழுகாதவர் ஆதல் - ஆகுதல் கடை - இழிவு நட்பு பாராட்டாதவராக இனிமை அல்லாத செயல்களைச் செய்பவரிடத்தில் நாமும் பண்போடு நடக்க முடியாதிருத்தல் இழிவாகவே கருதப்படும். விளக்கம் : நம்மிடம் இனிமையாக பேசத் தெரியாதவர், தீமை செய்ய நினைப்பவர் இவர்கள் உண்மையிலேயே நம் நண்பர்களாக இருக்க முடியாது. உண்மையான நட்பு இருப்பவர்கள் தவறான பேச்சிலும் செயலிலும் ஈடுபட மாட்டார். அப்படி ஒருவர் தவறாக பேசுகிறார் நமக்கு எதிரான செயலில் ஈடுபடுகிறார் என்றால் நாமும் அவருக்கு அப்படியே திருப்பிப் செய்ய நினைப்பது அநாகரிகமாகும். அப்படிச் செய்வோமானால் அவருக்கும் நமக்கும் என்ன வேறுபாடு இருந்துவிடப் போகிறது.? அவரைப் போலவே நாமும் பண்பற்றவர்களாக நடந்து கொண்டால் நாம் அவரை விடவும் இழிவானவர்களாகவே கருதப்படுவோம் என்கிறார...