மயங்கொலிகள்
மயங்கொலிகள் நாம் சில சொற்களை எழுதும்போது அந்த எழுத்தைப் பயன்படுத்தவா இந்த எழுத்தைப் பயன்படுத்தவா என்று குழப்பமாக இருக்கும். கடைசியில் ஏதோ ஒரு சொல்லைப் போட்டு எழுதி விடுவோம். அது பொருளையே மாற்றிவிடும். இப்படி எழுதும்போது இதுவா... அதுவா... என்று மயங்க வைக்கும் எழுத்துக்களை மயங்கொலிகள் என்கிறோம். ண,ன,ந இந்த மூன்று எழுத்துக்களும் எழுதும்போது பெரும் பாடுபடுத்தும். இந்த ணகரம் னகரம் நகரம் பற்றி இக்கட்டுரையில் காண்போம். பெரும்பாலும் மூன்று சுழி ணகரமா இரண்டு சுழி னகரமா அல்லது நகரமா என்ற ஐயம் ஏற்படுவதற்குக் காரணம் சரியான பொருள் அறியப்படாமை என்பதை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். அடுத்து உச்சரிக்கும்போது தவறாக உச்சரிக்கக் காரணம் எழுத்துகள் பிறக்கும் இடத்தைப்பற்றி சரியாக அறிந்து கொள்ளாததால்தான் என்பது எனது கருத்து. எழுத்து பிறக்கும் இடத்தையும் அதன் பொருளையும் சரியாக தெரிந்து கொள்வோமானால் பேசும்போதும் எழுதும்போதும் தவறுகள் ஏற்பட வாய்ப்பிருக்காது. 1.ண என்பதை ட...