அதிக மதிப்பெண் வேண்டுமா ...
அதிக மதிப்பெண் வேண்டுமா... தேர்வு என்றாலே மதிப்பெண்தான். ஆண்டு முழுவதும் உழைத்த உழைப்பின் பலன் மதிப்பெண்மூலமாகதான் அறிய வரும். மதிப்பெண் மட்டுமே ஒரு மாணவனின் திறமையைத் தீர்மானிக்கும் கருவியாக இல்லை என்று சும்மா வாய்ப்பேச்சுக்குச் வேண்டுமானால் சொல்லலாம். யாருமே வெறுமனே உனக்கு நல்ல அறிவு இருக்கிறது. ஆதனால் மேல்படிப்பிற்குச் சேர்த்துக் கொள்கிறேன் என்று சேர்த்துக் கொள்ளப் போவதில்லை. சும்மா பாஸ் மார்க் வாங்கினால் போதும் என்று நம்மாலும் திருப்தி அடைந்துவிட முடியாது. அப்படியே ஒருவன் சொல்லிக் கொண்டு திரிந்தால் அது படிக்க சோம்பல்பட்டு சொல்லும் சொல்லாகத்தான் இருக்கும். உங்களுக்கு மதிப்பெண் வேண்டும்தானே அப்படியானால் தேர்வுக்கு முன்பு மூன்று முக்கியமான விசயங்களை நீங்கள் கண்டிப்பாக மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். 1. தேர்வைப் பற்றிய நேர்மறை எண்ணம் வேண்டும்: தேர்வு என்பது உங்கள்முன் வைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய சவால் என்ற எண்ணத்தை அடியோடு மாற்ற வேண்டும். தேர்வு உங்கள் திறனை ...