போகிப் பண்டிகை
போகிப் பண்டிகை கதை இல்லாமல் பண்டிகைகள் இல்லை. யோகிக்குக் கதை இருக்கும்போது போகிக்குக் கதை இல்லாமல் இருக்குமா என்ன? போகிக்கும் கதை ஒன்று இருக்கிறது. ஒரு கடினமான சூழல் அல்லது உழைப்புக்குப் பிறகு கிடைக்கும் நன்மையைக் கொண்டாடி மகிழ்வது தான் பண்டிகைகள். அந்தவகையில் போகியும் கடினமான காலத்தைக் கடந்து வந்து விட்டோம் என்ற மகிழ்ச்சியை அனைவருக்கும் தெரிவிக்கும் முகமாகவே கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். பழையவை ஒழிந்தன. தொல்லைகள் தொலைந்தன. ஆணவம் ஒழிந்தது. ஒழிக்கப்பட்டது. இனி நாளும் மகிழ்ச்சி. களிப்பு. பழையதை ஒழிந்தன. புதியவை புகுந்தன. புத்தொளி பிறந்தது. என்ற ஒரு புதுமையான எண்ணத்தோடு போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. புதிய வாழ்க்கையை எதிர்பார்த்து பழைய குப்பைகளை எல்லாம் முற்றிலுமாக அகற்றி தூய்மையோடு வருங்காலத்தை எதிர் நோக்கி கொண்டாடப்படும் பண்டிகை போகிப் பண்டிகை. கதை கதை என்றீர்களே... அந்தக் கதை என்ன என்று சொல்லுங்கள் என்று கேட்பது என் காதுவரை கேட்கிறது. போகிப் பண்டிகைக் கொண்டாடுவதற்கான காரணம் பற்றிய புராணக் கதை ஒன்று உள்ளது. நீரின்றமையாது உலகம். நீராதாரம் மழை. மழைக்குக்...