ஹோலியும் ஹோலிகாவும்
ஹோலியும் ஹோலிகாவும் தீபாவளி என்றால் பட்டாசு . பொங்கல் என்றால் கரும்பு. கிறிஸ்துமஸ் என்றால் கேக். ஹோலி என்றால் வண்ணம். இப்படி ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு தனி அடையாளம் உண்டு. பண்டிகை என்றாலே மகிழ்ச்சி தானாக வந்து குடி கொண்டுவிடும். ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு விதமான மகிழ்ச்சியைத் தரும். எல்லா பண்டிகைகளும் ஏதோ ஒரு சிறப்பைப் பெறுவதாக இருக்கும். ஒவ்வொரு பண்டிகைக்கும் உள்ள சிறப்பு அது கொண்டாடப்பட்டதன் வரலாறு ஆகியவற்றை அறியும்போது எந்த ஒரு பண்டிகையும் வெறுமனே பொழுது போகாமல் கொண்டாடப்பட்டதல்ல என்ற உண்மை புரிய வரும். புராண கதைகளாக இருக்கலாம் அல்லது வரலாற்று உண்மை நிகழ்வுகளாகக்கூட இருக்கலாம். பண்டிகையின் நோக்கம் மகிழ்ச்சி ஒன்றையே குறிக்கோளாக கொண்டிருக்கும். இதுவரை இருந்த துன்பங்கள் நீங்கியது. அப்பாடா...இனி எந்த அச்சமும் இல்லை. கொண்டாடுவோம் வாருங்கள் என்று அழைப்பு விடுப்பதாகவே இருக்கும். வண்ணங்களின் பண்டிகையான ஹோலி கொண்டாடப்பட்ட வரலாறு சுவாரசியமானது. பால்குன் மாதத்தில் வரும் முழுநிலவு நாளில் ஹோலி கொண்டாடப்படுவது வழக...