வையத் தலைமை கொள்
வையத் தலைமை கொள் பாரதியாரின் புதிய ஆத்திசூடியில் வரும் ஒரு வரி "வையத் தலைமைகொள்" தலைமை பண்பு இருந்தால் மட்டுமே ஒரு சமுதாயத்தை முன்னேற்றத்தை நோக்கி கட்டுக்கோப்பாக அழைத்துச செல்ல முடியும். தலைமை சரியாயில்லாதிருந்தால் எந்த அமைப்பும் தனது இலக்கை அடைந்துவிட முடியாது. "தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி" முன்னேர் செல்வது போலத்தான் பின்னேர் செல்லும். சரியான தலைமை அமைந்தாலொழிய ஒரு கூட்டமோ குழுவோ அமைப்போ சமுதாயமோ எதுவும் வெற்றி பெற இயலாது. இளைய தலைமுறையை வழி நடத்துவது எளிதான செயலல்ல. அவர்கள் மனம் கொள்ளும்படி நமது நடவடிக்கைகள் இருந்தால் மட்டும் போதாது. அவர்கள் எதிர் காலத்திற்கு எது நல்லது? எந்தப் பாதையில் சென்றால் அவர்கள் இடறல் இல்லாமல் இலக்கைச் சென்றடைய முடியும் என்பதை ஓர்ந்து ஆய்ந்து நல்ல பாதையில் அவர்களை வழிநடத்த ஒரு தலைவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். கண்மூடித்தனமான நம்பிக்கை கடைசிவரை கரை சேர்க்காது. . ஒரு தலைவன் உருவாக்கப்படக்கூடாது. உருவாக வேண்டும். அவனுடைய நடவடிக்கைகள்,பண்பு நலன்கள்,கொள்கைகள் போன்றவை அனைவராலும் ஈர்க்கப்பட்ட வேண்டும். தலைமைப்பண்புகளை வளர...