Posts

Showing posts with the label அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை போல -மூதுரை

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை போல

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை போல  "கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார்  தம்மோடு கூடுதல் கோடி பெறும் " என்று கோடியை அள்ளி விட்டு அவர் பாட்டுக்குப் போய்விட்டார் ஔவை. ஔவை இப்படிச் சொல்லி விட்டாரே என்று நமக்கும் உறவுகளோடு  ஒட்டி வாழ ஆசைதான். ஆனால் எப்படித்தான் ஒட்டநினைத்தாலும் தாமரை இலை மேல் நீர் போல  ஒட்ட மறுப்பவர்களை என்ன செய்வது? அப்படி ஒட்ட மறுப்பதற்குக் காரணம்? உங்கள் குணமா? அல்லது உங்களிடம் இல்லாத பணமா? என்று சிந்தித்துப் பார்த்தால் இந்த விலகலுக்குக் காரணம் பணமாகத்தான் இருக்கும். "பணம் இருப்பவன் பின்னால் பத்துப்பேர் பதவி இருப்பவன் பின்னாலும் பத்துப்பேர் "என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த பத்துப்பேர் யார் யார்? என்று பட்டியலிட்டுப் பாருங்கள். அதில்  உறவுகளும் இருக்கும். உங்களிடம் பொருள்  இல்லாதபோது உறவுகள் உறவினர்  என்று சொல்லிக்கொள்ள விருப்பப்பட மாட்டார்கள். இதுதான் எதார்த்தம். ஒன்றிரண்டு உறவுகளுக்கு மட்டும் விதிவிலக்கு இருக்கலாம் . மற்றபடி பெரும்பான்மை பணத்தின் பக்கம்தான் நிற்கும். ஒட்டி நின்று நலம் விசாரிப்பதோடு நிறுத்திக் கொள்வர். அதனால்...

அற்றகுளத்தின் அறுநீர்ப் பறவை போல

அற்றகுளத்தின் அறுநீர்ப் பறவை போல  நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாக இருப்பவர்கள் உறவுகள். "கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி  பெறும் " என்று தனது தனிப்பாடலில் சொல்லித் தந்தார் ஔவை . மூதுரைப் பாடலில் விளக்கமாக சில வாழ்வியல் உண்மைகளைச் சொல்லித் தருகிறார். எல்லா உறவும் உறவல்ல. யார் யார் உறவினர்.... யார்யாரெல்லாம் உறவினர் அல்லர் என்பதை நான் உங்களுக்குச்  சொல்லித் தருகிறேன் என்கிறார் ஔவை. ஔவையின் பாடல்கள் பொழுதுபோகாமல்  எழுதப்பட்டவை அல்ல. அனுபவச் சாறு பிழிந்து கொடுக்கப்பட்ட வாழ்வியல் விருந்து. எக்காலத்தினரும் அருந்தி இன்பம் காணவல்ல அருமருந்து. மூதுரையின் ஒவ்வொரு பாடலும் தெரிந்து கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்களை நடத்திச் செல்லும். இன்றைய மூதுரை விருந்து இதோ: அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவு அல்லர் - அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும்  நெய்தலும் போலவே ஒட்டி யுறுவார் உறவு                   -  மூதுரை விளக்கம் : நீர்ப்பறவைகள் குளத்தில் நீர் நிறைந்திருக்கையில் அதைச் சு...