இளையவள்
இளையவள் பாலா.... இங்கே வா...." "இதோ....வந்தேன் அண்ணி..."நாலுகால் பாய்ச்சலில் ஓடினாள் பாலா. "அந்த குடத்தில் தண்ணீர் இல்லை. ஒரு எட்டு ஓடிப்போய் கிணற்றில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வைத்துவிடு." "சரி அண்ணி..."குடத்தையும் நீர் இறைக்கும் பட்டையையும் கையில் எடுத்து கொண்டு புறப்பட்டாள் பாலா. அதற்குள் இளைய அண்ணி," பாலா இங்க கொஞ்சம் வாயேன். தொட்டிலில் தம்பி அழுகிறான். கொஞ்சம் ஆட்டி விடு.. " "சரி அண்ணி." கையில் எடுத்த குடத்தைக் கீழே வைத்துவிட்டு தொட்டிலில் கிடக்கும் அண்ணன் மகனை ஆட்டி விட ஓடினாள் பாலா. பாலா இந்த வீட்டு கடைக்குட்டிப் பெண். அம்மா இருக்கும்வரை செல்லமாக வளர்ந்தாள். அம்மா போன பின்னர் நாய்படாத பாடுதான். யாரிடம் சொல்ல...எடுபிடி வேலை செய்தவள் எந்திரமாய்ப் போனாள். தொட்டிலைப் பார்த்தாள்...அங்கே குழந்தை துருதுருவென்று விழித்துக் கொண்டு கிடந்தான் இளைய அண்ணன் மகன். இப்படியே விட்டுவிட்டுச் சென்றால் ...தொட்டிலில் இருந்து கீழே விழுந்து விடுவான் என...