குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்.....
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்.... " குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு " குறள் : 544 குடி- குடிமக்கள் தழீஇ - அணைத்துக்கொண்டு கோலோச்சும் - நல்லாட்சி செய்யும் மாநில - பெரிய நிலத்தின் மன்னன்- ஆட்சியாளன் அடி - வழியில் தழீஇ - பொருந்தி நிற்கும்- நிலைத்திருப்பர் உலகு - உலகத்தவர் குடிமக்களை அன்போடு அணைத்து அவர்கள் நலன் கருதி நல்லாட்சி செய்யும் அரசனைப் பற்றிக்கொண்டு அவன் வழியில் அந்நாட்டு மக்கள் அணிவகுத்து நிற்பர். விளக்கம் : மன்னன் என்றால் நாட்டு மக்கள் நலனில் அக்கறை கொண்டவனாக இருக்க வேண்டும். நாட்டு மக்களை அரவணைத்துச் செல்லும் பண்பு இருக்க வேண்டும். அவர்கள் இன்பதுன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் உயர்பண்பு இருக்க வேண்டும். துன்பம் கண்டவிடத்து துயர் துடைக்க ஓடிவரும் கண்ணோட்டம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நல்ல ஆட்சியாளன் கிடைத்துவிட்டால்....? மக்கள் மனம் மன்னனைக் கொண்டாடும். மன்னனுக்கு நாட்டு மக்கள் மனதில் ஓர் நிலையான கிடைத்துவிடும். மன்னனை அணுகி தங்கள் குறைகளை எளிதாக ...