நிறைகுடம் ததும்பாது
நிறைகுடம் ததும்பாது குடத்தில் நீர் எடுத்துவரும்போது குடத்தில் நீர் குறைவாக இருந்தால் அங்கிட்டும் இங்கிடுமாக அலம்பும். இடுப்பில் குடம் நிற்கவே நிற்காது. கீழே விழுந்து விடுமோ என அச்சமாக இருக்கும் ஆனால் குடத்தில் தண்ணீர் நிறைந்து இருந்தால் குடம் ஆடாமல் அசையாமல் அப்படியே இருக்கும். நம்மால் எளிதாக குடத்தைச் சுமந்து வர முடியும். இதனைப் போன்றதுதான் மனிதனும். நல்ல அறிவுள்ள ஒருவன் அடக்கமாக இருப்பான். எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ள மாட்டான். ஆனால் அறைகுறை அறிவு இருக்கு பாருங்க....ஐய்யைய்யையோ.....அலப்புற அலப்பு தாங்க முடியாது. தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல பாவ்லா காட்டிக் கொண்டு திரியும். சர் ஐசக் நியூட்டன் பற்றி நமக்குத் தெரியும். புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்த விஞ்ஞானி. இங்கிலாந்து அரசு நாட்டின் உயரிய ...