காக்கைப் பாடினியார்
காக்கைப் பாடினியார் தலைவன் ஒருவன் வெளியூருக்குப் பொருளீட்ட சென்று விட்டான். தலைவி தலைவனை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறாள். தலைவன் வந்தபாடில்லை.. தலைவனைப் பற்றிய எந்த செய்தியும் இல்லை. என்ன ஆனதோ ஏதானதோ என்று தலைவி புலம்புகிறாள். வருவானோ வரமாட்டானோ என்று ஏக்கத்தோடு வழிமேல் விழி வைத்துக் காத்துக் கிடக்கிறாள். அப்போது .... வீட்டு முற்றத்தில் இருந்த மரத்திலிருந்து காகம் ஒன்று கரைகிறது. ஆ....இது காக்கையின் குரலல்லவா! காக்கைக் கரைந்தால் விருந்து வரும் என்று சொல்வார்களே! அப்படியானால் ..... அப்படியானால்.... என் வீட்டிற்கு விருந்து வரப்போகிறதா? எங்கள் வீட்டிற்கு விருந்தாளியாக யார் வரப்போகிறார்? வேறு யார் வரப்போகிறார்கள்? ஒருவேளை ....அவராக இருக்குமோ.? என் தலைவன் வரப் போவதைத்தான் இந்த காக்கை அறிவித்துவிட்டுச் செல்கிறதோ...? இருக்கலாம்... இருக்கலாம். அந்த நம்பிக்கையில் தலைவி முகத்திலிருந்த கவலை கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து காணாமல் போயிற்று. நம்பிக்கையோடு தலைவன் வருகைக்காகக் காத்திருக்கிறாள் . அவள் எதிர் பார்த்தது போலவே இதோ தலைவனும் வந்து விட்...