நெஞ்சம் திறப்போர் காண்குவர்
நெஞ்சம் நினைப்போர் காண்குவர் வாழ்த்துகள் எழுத வார்த்தைகள் தேடி புறநானூற்றுப் பாடல்களைப் புரட்டியபோது கண்ணில் பட்டது ஆத்திரையனார் என்ற புலவர் எழுதிய ஒரு பாடல். எந்தை வாழி என்று தொடங்கிய அந்தப் பாடல் மறுபடியும் மறுபடியும் என்னை படிக்கத் தூண்டியது. சங்ககாலப் புலவர்கள் மன்னர்களைப் பாடிப் பரிசில் பெற்று செல்வது வழக்கம். அப்படிப்பட்ட பல பாடல்களை நாம் படித்திருக்கிறோம். பரிசில் பெறுவதற்காகப் பாடிய பாடல்களாக இருந்தாலும் தகுதிவாய்ந்த மன்னர்களை மட்டுமே பாடும் பண்பு புலவர்களிடம் இருந்தது என்பது பாடப்பட்ட அரசர்களைப் பற்றிச் சொல்லப்படும் செய்திகளிலிருந்து நாம் அறிகிறோம். இங்கே புலவர் ஒருவர் அரசனைப் பற்றி வாழ்த்திப் பாடி இருக்கிறார். மன்னன் பெயரைப் பாடலின் முதல் வரியிலேயே சொல்லிவிட்டார். பாடியவர் யார் என்று அறிய வேண்டாமா? கள்ளில் ஆத்திரையனார் என்பவர்தான் ஆதனுங்கன் என்ற மன்னனைப் புகழ்ந்து பாடிய புலவர். ஆத்திரையனாருக்கு மன்னன் ஆதனுங்கன்மீது பேரன்பு உண்டு. அந்த அன்பை கவியாக்கி மன்னன் முன் படைக்கிறார். பாடல் மன்னனுக்காக.... பாடலின் நயம் நமக்காக..... " எந்தை வாழி ஆதனுங்க!என் ...