பாரி பாரி என்று பல ஏத்தி
பாரி பாரி என்றுபல ஏத்தி கபிலரும் பாரியும் சிறந்த நண்பர்கள். முல்லைக்குத் தேர் கொடுத்த நிகழ்வுக்குப் பின்னர் பாரியின் புகழ் அண்டை நாடுகள் எங்கும் பரவியது. பாரியைப் பார்த்தால் நம் வறுமை ஒழியும் என்று புலவர்கள் நம்பினர். அதனால் நாள்தோறும் புலவர்கள் வந்து பரிசில் பெற்றுச் சென்றனர். எப்போதும் பாரியின் அவையில் புலவர்கள் இருந்துகொண்டே இருப்பர். அப்படி வருகிற புலவர்களோடு ஒருநாள் கபிலர் பேசிக் கொண்டிருந்தார். பேசும் ஒவ்வொருவர் வாயில் இருந்தும் எப்படியாவது ஒரு முறை பாரி என்ற பெயர் உச்சரிக்கப் பாடுவதைக் கவனித்தார் பாரி. உள்ளுக்குள் பெருமிதம். ஆனால் இவர்கள் எல்லாம் உண்மையாகவே பாரியைப் புகழ்கிறார்களா இல்லை பரிசில் பெற வேண்டும் என்ற நோக்கிற்காக ஏதோ புகழ்ந்து சொல்லி விடுவோம் என்று சொல்கிறார்களா என்று உள்ளுக்குள் ஒரு விவாதம் நடத்திப் பார்த்தார். அப்போது பாரிக்கு இணையான வள்ளல் இந்த உலகில் வேறு யார் இருக்கிறார்கள் என்ற தேடல் வந்தது. "ஏனில்லை இதோ இவர் இருக்கிறாரே" என்ற குரல் செவியோரம் புள்ளொன்று வந்து செய்தி ஒன்று சொல்லிப் போனது. முகம் மகிழ்ச்சியால் மலர்ந்து நின்றது. பாரியின் முகம் மலர்ந்து ப...