பல, சில என்பவற்றின் புணர்ச்சி விதி
பல ,சில என்பவற்றின் புணர்ச்சி விதி பல நேரங்களில் சில இடங்களில் பல மற்றும் சில ஆகிய சொற்களை எழுதும்போது வல்லினம் மிகுமா ?மிகாதா...? என்ற ஒரு குழப்பம் ஏற்படலாம். அதற்கான தீர்வாக நன்னூலார், " பலசில எனுமிவை தம்முன் தாம்வரின் இயல்பும் மிகலும் அகரம் ஏக லகரம் றகர மாகலும் பிறவரின் அகரம் விகற்ப மாகலும் உளபிற " என்று எழுதியுள்ளார். பல, சில என்னும் சொற்களுக்கு முன் அதே சொற்கள் வந்து புணரும்போது இயல்பாக அப்படியே வருதல் உண்டு. எடுத்துக்காட்டு: பல + பல = பலபல சில + சில = சிலசில வல்லினம் மிகுந்து வருதலும் உண்டு. எடுத்துக்காட்டு : பல + பல = பலப்பல சில + சில = சிலச்சில லகரம் றகரம் ஆதலும் என்ற விதிப்படி நிலைமொழி ஈற்றில் உள்ள அகரம் கெட லகரம் றகரமாகி வருதலும் உண்டு. எடுத்துக்காட்டு : பல + பல = பற்பல சில + சில = சிற்சில இப்போது மூன்று வழிகளில் அவை எழுதப்படலாம் என்பது பற்றிய தெளிவு கிடைத்திருக்கும். பல மற்றும் சில ஆகிய சொற்களின் பின் வேறு சொற்கள் வந்தால் இயல்பாகவும் புணரு...