பாவமன்னிப்பு
பாவமன்னிப்பு ஞாயிறு என்றாலே போதும். செல்வ ரத்தினம் வீடு காலையிலிருந்தே ஒரு பரபரப்பிலேயே இருக்கும். ஆளாளுக்கு குளித்துவிட்டு கோவிலுக்குப் புறப்படும் முன்னே ஒரு களபரமே நடந்து முடிந்துவிடும். "அம்மா இன்னைக்கு என்ன டிரஸ் போடணும்...." "அம்மா என் கம்மலைப் பார்த்தியளா...." "அம்மா என் ஷூ எல்லாம் துடைச்சு வச்சாச்சா..." ஆளுக்கொரு மூலையிலிருந்து கத்தி தொலைத்து விடுவார்கள். இது இந்த வாரம் மட்டுமல்ல... வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை ஆனால் இதே கத்தலும் களேபரமும்தான். செல்வரத்தினம் மட்டும் அமைதியாக ஒரு நாற்காலியில் அமர்ந்து இன்று என்ன பாவஅறிக்கை செய்ய வேண்டும் என்று மனதிற்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தார். கண்கள் மூடிய நிலையில் மறுபடியும் மறுபடியும் அந்தக் காட்சி மனக்கண் முன் வந்து நின்று மன்னித்துவிடுங்கள் சாமி... மன்னித்து விடுங்கள் சா...