இணைப்பு மொழி என்றால் என்ன?
இணைப்பு மொழி என்றால் என்ன? இணைப்பு மொழி என்றால் என்ன? என்ற கேள்வியைத் கேட்டுப் பாருங்கள். பலருக்குப் புரியவில்லை. இணைப்பு என்றால் ஒரு பாலம். மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்திற்காக இருவருக்கு இடையே ஒரு பாலமாக இருந்து செயல்பட வேண்டும். நாம் பேசும் மொழி கேட்பவர்களுக்கும் புரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவரால் எதிர்வினையாற்ற முடியும். நம்மாலும் நாம் சொல்ல வந்த கருத்தை எதிராளிக்குப் புரிய வைக்க முடியும். அப்படி இருவருக்கும் புரிந்த ஒரு மொழி ஒன்று உண்டென்றால் அதுதான் இணைப்புமொழியாகும். அதுதான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும்.இருக்க முடியும். நடைமுறைக்கும் ஒத்துவருவதாகவும் இருக்கும். அப்படி இல்லாமல் இருவருக்குமே புரியாதமொழி எப்படி இணைப்புமொழியாக இருக்க முடியும்? அவர் பேசும் மொழி நமக்குத் தெரியாது. நாம் பேசும் மொழி அவருக்குத் தெரியாது. அப்படி இருக்கும்போது இணைப்பு மொழியாக எந்த மொழி இருக்கும்? சற்று சிந்தித்துப் பாருங்கள். சைகைமொழியாகத்தான் இருக்கும். கைகளை ஆட்டி ...மண்டையை ஆட்டி... கண்களை உருட்டி ...பேச வேண்டியதுதான். வேறு வழியே கிடையாது. நான் சொல்வது உண...