திருநெல்வேலியில் ஏல
திருநெல்வேலியில் ஏல திருநெல்வேலி என்றாலே அல்வா. அதுவும் இருட்டுக்கடை அல்லாவுக்கு அடிமைப்பட்டுக் போன நாக்கு வேறு எந்த அல்வாவையும் ருசி பார்க்காது. தாமிரபரணி ஆற்றுத் தண்ணீருக்குக்கூட தனி ருசி உண்டு. நெல்லை மக்கள் பேச்சில் இனிமை இருக்கும். மரியாதையோடு பேசும் பண்பு உண்டு. ஒவ்வொரு ஊருக்கும் தனி அடையாளம் இருக்கும். பேசும் பேச்சிலிருந்து இது எந்த வட்டார வழக்குச் சொற்கள் என்பதைச் சொல்லிவிடலாம். பேரைச் சொல்லாமலேயே ஊரைக் கண்டுபிடித்துவிடலாம். திருநெல்வேலி என்றதும் 'ஏல' என்ற சொல் உள்ளேன் ஐயா என்று முந்தி வந்து தலை தூக்கி நிற்கும் அண்மை காலமாக நம் காதுகளில் அடிக்கடி வந்து விழும் ஒரு சொல் 'ஏல ' என்பதுதான். ஏல...போல...வால.... இது எல்லாமே எங்கள் பகுதியில் பேசப்படும் சொற்கள்தான். மறுக்கவில்லை. ஆனால் இந்த ஏல...ஏல...என்பது மட்டும் தொலைக்காட்சியில் அடிக்கடி உச்சரிக்கப்படும் சொல்லாகிவிட்டது. திரைப்படங்களால் இந்தச் சொல் தனிக்கவனம் பெற்று வருகிறது. இதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் உண்மையிலேயே அந்தச் சொல் உண்மையான பொருளில் சொல்லப் படுகிறதா...? அல்லது திசைமாறிப் போகிறதா ?என்று யோசித்துப் ப...