அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை போல்...
உறவினர் யார்? நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாக இருப்பது உறவுகள். உறவுகள் சூழ இருந்தால்தான் மனதில் ஒரு மகிழ்ச்சி இருக்கும். உறவு என்பது வெறுமனே இரத்த சம்பந்தப்பட்ட உறவுகள் என்பதல்ல. குடும்ப உறவுகளைத் தாண்டி நட்பும் உறவாகவே கருதப்படும். நம் இன்ப துன்ப காலங்களில் நட்பும் கரம் கோத்து உடன் நடப்பதுண்டு. எப்போதும் நம்மைச் சுற்றி ஒரு உறவு வளையம் இருந்து கொண்டே இருக்கும். அதில் முதன்மையான உறவு குடும்ப உறவு என்றார் ஔவை. அதனால்தான், " கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும் " என்று தனது பாடலில் சொல்லி வைத்தார் ஔவை. இதே ஔவை இன்னொரு பாடலில் தனது கருத்தில் சற்று மாறுபடுகிறார். அப்படி என்ன மாறுபடுகிறார் ? ஔவை மாற்றி மாற்றி பேசுபவர் அல்லர். அப்படியானால் இந்த மாறுபாடு எதற்கு? உறவு வேண்டுமா? வேண்டாமா? எனக்குள் ஆயிரம் கேள்விகள். கேள்விகள் எழுந்தால் விடையைத்தேடி யாரிடம் செல்ல முடியும் ? குழப்பமான மனநிலையோடு தமிழாசிரியர் வீடு நோக்கிச் சென்றேன். என் குழப்பத்தை ஆசிரியரிடம் கூறி த...