கோ...கோ... கொரோனா
கோ...கோ.. கொரோனா கோ...கோ....கொரோனா டோன்ட் டச் மீ ....கோன்னா பாடல் கேட்டு எட்டிப் பார்த்தேன் சுட்டிச் சிறுவர் இருவர் குட்டிக்கவசம் அணிந்து எட்டடி தொலைவில் மெட்டோடு பாடிச் சென்றனர் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன் வீட்டில் இருந்த சீனப்பொருட்களும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டன தொடாதே ..தொடாதே... கட்டிப் பிடிக்க வந்த சுட்டித் தம்பியை எட்டடி தூரத்தில் நிற்க வைத்த அக்கா சாப்பிடாதே... சாப்பிடாதே... அக்கா கை கழுவாமல் சாப்பிடுகிறாள் புகார் பத்திரம் வாசிக்கும் தம்பி வாங்க...வாங்க... கை கொடுக்க வந்த எதிர் வீட்டு மாமாவை கைகூப்பி வரவேற்ற அப்பா வேண்டாம்...வேண்டாம்... மறுத்து வந்த வீட்டுச் சாப்பாட்...