Posts

Showing posts with the label ஆசுகவி என்றால் என்ன -காளமேகம்

ஆசுகவி என்றால் என்ன

ஆசுகவி என்றால் என்ன  ஒரு குறிப்பிட்ட சொல்லைக் கொடுத்து இந்தச் சொல்லில் உடனே கவி பாடுக என்று கேட்டுக் கொண்டதும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் உடனே பாடுவது ஆசுகவி எனப்படும் . ஆசுகவி பாடுவதற்கு என்று பல புலவர்கள் இருந்தாலும் அவர்களுள் கவி காளமேகம் குறிப்பிடத் தகுந்தவராவார் . பருவத்தில் பொழியும் மழை போல அல்லாமல் உடனுக்குடன் கருக்கொண்டதும் பொழியும் மேகம் போல விரைந்து கவி  பாடும் ஆற்றல் காளமேகப் புலவரிடம் உண்டு. இவர் நாற்கவியிலும் பாடும்  புலமையுடையவர். இவருடைய பாடல்கள் சொற்சுவை, பொருட்சுவை கொண்டவையாக இருக்கும்.   இத்தகைய தனித்தன்மை காளமேகப் புலவரிடம் இருந்ததால்‌ அவர் "அதிமதுரக்கவி' என அழைக்கப்பட்டார்.  எப்போதும் ஒருவருடைய திறமையை மற்றொருவருடைய மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கும். அவர் ஒன்றும் அப்படியொரு புமமைமிக்கவரல்ல என்பதை நாலுபேர் மத்தியில் மெய்ப்பித்துவிட வேண்டும் என்று மனம் துடியாய்த் துடிக்கும். அதனால் சாத்தியமில்லாதது என்று நினைக்கும் ஒரு எழுத்தையோ, சொல்லையோ, சொற்றொடரையோ கொடுத்து ஒரு பாடல் பாடுக என்று கேட்டு மடக்க நினைப்பர். இப்படி ஒருவர்க்கு ஒரு குதர்க...