நமக்கு நாம் அழாதது என்னோ
நமக்கு நாம் அழாதது ஏனோ ஒவ்வொரு நாள் விடியும்போதும் வாழ்வில் ஒருநாள் குறைந்து கொண்டே இருக்கிறது. உடல்ரீதியான மாற்றங்கள் நிகழ்கின்றன. நேற்று இருந்தது போல இன்று இல்லை. மகிழ்ச்சியான குழந்தைப் பருவம் மாறுகிறது. அதற்காக நாம் யாரும் வருந்துவதில்லை. பிறந்தநாள் வந்ததென்று கொண்டாடி மகிழ்கிறோம். ஒரு வயது கூடிவிட்டதே என்று வருந்துவதில்லை. இளமையை கொண்டாடுகிறோம். இன்பத்தில் மெய்மறக்கிறோம். இதுதான் வாழ்க்கை என்று இன்பமாகப் பொழுதைக் கழிக்கிறோம். களிப்படைகிறோம். நேற்றைய நினைவு இல்லை. நாளை மாறப்போகும் காட்சியைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. கொண்டாட்டமும் கும்மாளமுமாக வாழ்க்கை நகர்கிறது. எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனரா? வாழ்க்கைப் போராட்டங்கள் வாசலைத் தட்டுகின்றன. விடியும் பொழுது நல்லதாக விடிய வேண்டுமே என்ற கவலையோடு பலருடைய வாழ்க்கை விடிகிறது.அதற்காக அழுகை வரவில்லை. இதுவும் கடந்து போகும் என்று கடந்து வந்துவிட்டோம். இப்படி இளமை போயே போயிற்று. இப்போது மூப்பு வந்து நிற்கிறது. வருந்தினோமா? இல்லை.சாதாரணமாக கடந்து போகிறோம். அதையும் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் செ...