மைண்ட் வாய்ஸ்
1. குரங்கின் எச்சரிக்கை போகாத...போகாத... ஊருக்குள்ள போகாத கொரோனா நடமாட்டம் ரொம்ப இருக்குதாம் புடிச்சிட்டுப் போயிரும் எச்சரித்து குட்டியைப் பிடித்து வைத்திருக்கிறதாம் குரங்கு! 2. செல்போன் பார்க்காதே மருத்துவமனை முன் போராட்டம் செல்போன் பார்த்து ஆயா மருத்துவம் பார்த்ததால் தாயும் சேயும் மரணமாம் இதற்காகதான் செல்போன் பார்க்காதே...பார்க்காதே என்று அம்மா தலையில் அடித்துக் கொண்டாரோ! 3. புகார் கொடுக்கும் புலி ஊருக்குள் ஆட்களையே காணோம் என்று கண்டுபிடித்துத் தரும்படி போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுப்பதற்காக புலி ஓடுகிறதோ? 4. பூனையின் சேட்டை " கிட்ட வராத...கிட்ட வராத நான் குடிச்சிட்டுப் போனதும் நீ வா" நாயை மூன்றடி தூரத்தில் நிற்க வைத்துவிட்டு பாலை குடித்து ஏப்பம் விட்டது பூனை! 5. தாய் சொல் தட்டாதே காடெங்கும் தண்ணீர் "கண்ட கண்ட தண்ணீரையும் குடிக்காதே வைரஸ் வந்துடும்" தாய் சொல் தட்டாமல் தாகத்தோடு...