Posts

Showing posts with the label எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்-வெற்றி வேற்கை

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் நீதி நூல்கள் வரிசையில் முதலாவது வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நூல்களுள் ஒன்று வெற்றி வேற்கை. ஆத்திசூடி போன்றே  பள்ளிப் பருவத்தில் நாம் மனப்பாடம் செய்த பாடல் வரிகள் இன்றும் நம்மோடு நடைபயின்று கொண்டிருக்கிறது. வெற்றி வேற்கைக்கு  நறுந்தொகை என்று மற்றுமொரு ஒரு பெயரும் உண்டு. அதிவீரராம பாண்டியன் இயற்றிய வெற்றி வேற்கை என்னும் நறுந்தொகையில் எண்பத்து இரண்டு பாடல்கள் உள்ளன. அவற்றுள் முதல் முப்பது  பாடல் வரிகள்  உங்களுக்காக...          1. எழுத்து அறிவித்தவன்    இறைவன் ஆகும்.  கல்வி கற்பித்த ஆசிரியர் இறைவனாகக்  கருதப்படுவார்.    2...கல்விக்கு அழகு       கசடற மொழிதல் கல்விக்கு அழகாவது யாதெனில்  கற்ற கல்வியைக்  பிழை இல்லாது சொல்லுதல் ஆகும். 3.  செல்வர்க்கு அழகு        செழுங்கிளை தாங்குதல்   மிகுந்த செல்வம் உடையவர்களுக்கு    அழகாவது   தமது சுற்றத்தினரைத் ...