அற்றார் அழிபசி தீர்த்தல்....
அற்றார் அழிபசி தீர்த்தல்.... அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றார் பொருள்வைப் புழி குறள் : 226 அற்றார் - பொருளற்றவர் அழிபசி - கொடிய பசி தீர்த்தல் - நீக்குதல் அஃது - அவ்வாறு செய்தல் ஒருவன் - ஒருவனுடைய பெற்றார் - பொருள் மிகுதியாகப் பெற்றவர் பொருள் - பொருளை வைப்புழி - சேமித்து வைக்குமிடம்.. கொடிய பசியால் வாடுபவரின் வயிற்றுப் பசியைப் போக்கி அவர் வயிற்றில் இடம்பிடிப்பதுதான் பொருளுடைய ஒருவன் தான் சேர்த்து வைத்தப் பொருளைச் சேமித்து வைக்கும் இடமாக இருக்கும். விளக்கம் : நிறைய பொருள் இருக்கிறது. அதனைப் பிற்காலத்தில் பயன்படுத்துவதற்காக களஞ்சியத்தில் சேர்த்து வைப்போம். அதிக விலை வரும்போது விற்று மேலும் அதிகம் பொருள் ஈட்டலாம் என்று நினைப்போம். நீங்கள் பொருளைச் சேர்த்து வைக்க வேண்டிய இடம் அது அல்ல . அதைவிடப் பாதுகாப்பான இடம் ஒன்று உண்டு. அவ்வாறு நீங்கள் சேமித்து வைக்கும் இடம் பிற்காலத்தில் உங்களுக்கு உதவுவதாக இருக்கும். அது எந்த இடம் என்று கேட்கிறீர்களா? ஏழையின் வயிறு . கொடிய வயிற்றுப்பசியால் வாடுகிறவனுக்கு உங்கள் பொருள...