வலவன் ஏவா வான ஊர்தி
வலவன் ஏவா வான ஊர்தி புறநானூற்று பாடல்கள் என்றாலே மன்னர்களைப் புகழ்ந்து பாடுவதாகத்தான் இருக்கும். மிகையான புகழ்தல் இருக்கும். காரணம் அப்போதுதான் பரிசில் கிடைக்கும் என்று அவ்வாறு புலவர்கள் பாடுவர் என்று நினைத்திருப்போம். ஆனால் வெறும் சுயநலத்திற்காக மட்டும் பாடுபவர்கள் அல்லர். ஒரு சில புலவர்கள் மன்னன் தவறு செய்தால் இடித்துரைப்பதற்காகவும் பாடல்கள் பாடியுள்ளனர். போர் நிறுத்தத்திற்காக தூது போன வரலாற்று நிகழ்வுகளும் உண்டு.ஏன் மன்னனுக்கு ஆக பெண் கேட்டுப் செல்லும் நற்பணியையும் நடத்தியிருக்கின்றனர். எனினும் புலவர்கள் என்றால் பரிசிலுக்காகப் பாடுபவர்கள் என்ற எண்ணம் பரவலாக அனைவர் மனதிலும் இருப்பதுதான் உண்மை. பரிசிலுக்காகப் பாடுவதாக இருந்தாலும் அதில் உலகியல் இருக்கும். உணர்வு இருக்கும். நம்மைச் சுற்றி நடக்கும் எதார்த்தத்தை உணர்த்துவதாக இருக்கும். மன்னனுக்கு மட்டுமல்லாது நமக்கும் சில செய்திகள் சொல்லப்பட்டிருக்கும். அதனால்தான் இன்றுவரை புறநானூற்றுப் பாடல்கள் நம்மால் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடலை வாசியுங்கள். சோழன் நலங்கிள்ளியை உறையூ...