Posts

Showing posts with the label ஔவையார் பாடல்

இல்லானை இல்லாளும் வேண்டாள்....

    இல்லானை இல்லாளும் வேண்டாள்... "பணம் பத்தும் செய்யும்" " பணம் இல்லாதவன் பிணம்"  "பணம் பந்தியிலே குணம் குப்பையிலே  "   இப்படி பணமொழிகள் ஏராளம்.     இவை எல்லாம் வெறும் மொழிகள் அல்ல.  பணமில்லாமல் பட்டு ..பட்டு.. நொந்து நூலாகிப்  போனவர்கள்   கூறிய அனுபவ மொழிகள்.   பணம் இல்லாமல் என்ன செய்ய  முடியும் சொல்லுங்க... பள்ளிக்குப் போகணுமா பணம்... மருத்துவமனைக்குப் போகணுமா பணம்... தவித்த வாய்க்குத் தண்ணீர் வாங்கணுமா பணம்.... ஒருவாய் சோறு தின்னணுமா பணம்... திருமணத்தை நிச்சயிப்பது பணம்.... நிச்சயித்த திருமணத்தை நிறுத்தி வைப்பதும் பணம்... செத்தா பணம்.... செத்த பிணத்தைப் புதைக்கப்பணம்.... இடையில் எங்காவது பணமில்லாமல் எதுவும் நடைபெறுகிறதா என்று  நினைவுபடுத்திப் பார்த்தால்....  ம்ஹும்....பணமில்லாமல் ஒன்றையும் அசைக்க முடியாது. இதுதாங்க எதார்த்த நிலைமை. பட்டிமன்றத்தில் பேசுவதற்கு  வேண்டுமென்றால் "பணம் என்னடா பணம் குணம் தானடா நிரந்தரம்" என்று  சொல்லிக் கொள்ளலாம். நிஜ வாழ்க்கையில் இது எல்லாம்  சாத்தியப்படாது. "பண...

நாலு கோடி

                          நாலு கோடி   மன்னர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைதான் சாசனம்.     மன்னன் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது.     மன்னர்களால் வாழ்ந்தவர்களும் உண்டு. வீழ்ந்தவர்களும் உண்டு.     வாய் தவறி வந்த வார்த்தைகள்கூட ஆணையாகி சில நேரங்களில்        ஆபத்துக்களைத் தந்துண்டு.     இங்கே சோழ மன்னர் ஒருவருக்கு திடீரென்று ஒரு ஆசை.     நாளை காலைக்குள் நாலு கோடிப் பாடல்கள் எழுதி வர வேண்டும்     என்று தன் அவையிலுள்ள புலவர்களுக்கு ஆணை பிறப்பித்து விடுகிறார்.     நாளை காலைக்குள் நாலு கோடி பாடலா?     அதிர்ந்து போகின்றனர் புலவர்கள்.     நான் எங்கே போவேன்....எங்கே போவேன்...     யாரிடம் போய் கேட்பேன்....ஐயோ...எனக்கு வேணும்...எனக்கு வேணும்...     ஆளாளுக்கு புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.     அப்போது அங்கே ஔவை...