Posts

Showing posts from November, 2024

சிலப்பதிகாரம் சொல்லும் மூன்று உண்மைகள்

Image
சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று உண்மைகள்  சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று உண்மைகள் பற்றி படிக்காமல் பள்ளிப் பருவத்தைக்  கடந்து வந்திருக்க முடியாது . பள்ளியில் படிக்கும் போது கேள்விக்கு பதில் எழுதுவதற்காக இதனைப் படித்திருப்போம்.  அதன் பிறகு அதைப் பற்றி பெரிதாக எந்தச் சிந்தனையும் எழுந்திருக்காது. ஆனால் இவை அனைத்தும் மதிப்பெண்ணுக்காகப் படித்துவிட்டு  அப்படியே கடந்து போவதற்காகச் சொல்லப்பட்டவை அல்ல.  வாழ்க்கைப் பாடங்கள்.  அந்த மூன்று உண்மைகளையும் பற்றி இக்கட்டுரையில் காண்போம். 1.அரசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றாகும்”. 2.உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர். 3.“ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்” என்ற மூன்று உண்மைகளையும் உரைப்பது சிலப்பதிகாரம். 1. அரசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றாகும்: தவறு செய்தால் தண்டனை உண்டு. அந்தத் தண்டனை வெளியிலிருந்து யாரும் வந்து கொடுக்கப் போவதில்லை. அந்தத் தண்டனையிலிருந்து சாதாரண  மக்கள் முதல் மன்னன் வரை யாரும்  தப்ப முடியாது. மன்னனே ஆயினும் தவறு செய்தால் தப்ப முடியாது என்பதைத்தான்  "அரசியல் பிழைத்தார்க்கு அறம் ...

தாவீதும் கோலியாத்தும்

தாவீதும் கோலியாத்தும்  சூழ்நிலைக்கு  ஏற்ப விவேகமாக செயலாற்றத் தெரிந்தால் வெற்றி நிச்சயம். அதனால் கிடைக்கும் மேன்மையையும் புகழும் என்றென்றும்  பேசப்படும். பெருமை சேர்க்கும். வாய்ப்பு வரும்போது அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தெரிந்தவன் புத்திசாலி. தனக்கு மட்டுமல்ல தன்னைச் சார்ந்தவர்களுக்கும் சாதகமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன்  அதிபுத்திசாலி மட்டுமல்ல சிறந்தத் தலைவனாக இருக்கக்கூடியவனாவான்.   அவனை உலகம் கொண்டாடும். அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட்டிருக்கும். வேதாகமத்தில் இவ்வாறு  விவேகமாக செயல்பட்ட ஒருவரின் வரலாறு ஒன்றுண்டு. இயேசுவுக்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு பெலிஸ்தியர், இஸ்ரவேலர் மீது போர் தொடுத்து தொல்லை கொடுத்து வந்தனர். வெற்றி இருபக்கமும் மாறி மாறி இருந்தது. எனினும்  மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போனது. மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாயினர். வாழ்வு மிகவும் கடினமான நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆடு, மாடு, செல்வங்கள் திருடப்பட்டன.  அந்தவேளையில்இஸ்ரவேலரின் ராஜாவாக  சவுல் என்ற மன்னன் இரு...

கன்னா பின்னா

கன்னா பின்னா எனக்கொரு ஆசை. எப்படியாவது கவிதை எழுதி அரசரிமிருந்து பரிசு  வாங்கிவிட வேண்டும். அதனை நாலு பேரிடம் காட்டி எனக்கும் கவிதை எழுத வரும் என்று சொல்லி பெருமைப்பட வேண்டும். அனைவரும் மெச்ச வேண்டும். ஆனால் இதெல்லாம் நடக்கிற காரியமா? தமிழில் நாலு நல்ல சொற்கள்  சரியாக எழுதத் தெரியாத எனக்கு  கவிதை எழுத ஆசை வரலாமா? கூடாது....கூடாது எனக்கு வரக் கூடவே கூடாது. கூடாது கூடாது என்று குந்தி இருந்துவிட்டால்  எல்லாம் முடிந்துவிடுமா? நாளைய சோற்றுக்கே வழியில்லையே... உனக்கெல்லாம் குடும்பம் எதற்கு? குந்திக் தின்ன நாலு காசு தேடி வைத்திருக்கிறீரா? இல்லை... தோட்டம் துறவு என்று  வாங்கித்தான் போட்டுருக்கிறீரா? நாளையப் பாட்டுக்கு உலை வைக்க ஆழாக்கு அரிசி இல்லை. புலவன் புலவன் என்று சொல்லி விட்டுத்  திரிந்தால் போதாது. எங்கேயாவது போய் பாடி வயித்துப் பாட்டுக்கு ஏதாவது கிடைக்குமா என்று பாரும். நேற்று மனைவி திட்டியது  மறுபடியும் மறுபடியும் தீட்டிய  கூராயுதமாக நெஞ்சில் வந்து  தைத்துப் போனது. எல்லோரும் அரசரிடமிருந்து பரிசுப் பொருட்கள் வாங்கி வரும்போது எனக்கு மட்டும் அந்த ...

விதியின் பிழை

விதியின் பிழை இந்த உலகில் பிறந்தவர் அனைவரும்  மகிழ்ச்சியாக வாழத்தான் நினைக்கின்றனர்.ஆனால் நாம் நினைத்தபடி வாழ்க்கை அமைந்து விடுகிறதா? நாம் ஒன்று நினைக்க வண்டி எங்கெங்கோ நம்மை அது போக்கில்  இழுத்துச் செல்கிறது. சில நேரங்களில் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது. அந்த மகிழ்ச்சியை முழுவதும் அனுபவிக்கும்  முன்னர் எதிர்பாராமல் எதிலோ முட்டி நிலைகுலைய வைக்கிறது. தடுமாறி நிற்க வைக்கிறது. தலை கீழாக விழ வைக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் காரணம் என்ன? யாரிடம் எல்லாமோ கேட்டுப் பார்க்கிறோம். யாருக்கும் சரியாகப் பதில் கூறமுடியவில்லை. ஆனால் பெரும்பாலோனோர் சொல்லும் பதில் விதி வலியது. விதிப்படித்தான் வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்று இறைவன் அன்று விதித்த விதியை இன்று யாராலும் மாற்ற இயலாது என்பதுதான். “ நல்லவன் வாழ்வான், கெட்டவன் அழிவான்” – என்பதும் “ வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்;” – என்பதும் கேட்பதற்கும் சொல்வதற்கும் எழுதுவதற்கும் நன்றாகத்தான் உள்ளது. ஆனால் நடைமுறையில்?  நடப்பவற்றிற்கும் நாம் நினைப்பவற்றிற்கும்  எத்தனை மாறுபாடு? எத்தனை வேற...

வெட்டனவை மெத்தனவை...

"இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய்க் கவர்ந்தற்று" என்பார் வள்ளுவர். இனிய சொல் இருக்க ,துன்பம் தரும் சொற்கள் எதற்கு? ஒரு மரத்தில் நல்ல இனிமையான பழங்கள் இருக்கின்றன. அவற்றை விட்டுவிட்டு காய்களைப் பறித்து உண்ண யாராவது விருப்புவார்களா? அப்படி ஒருவருக்கு ஒரு விருப்பம் ஏற்படுவது போன்றதுதான் இன்சொல்லைத் தவிர்த்து வன்சொல்லைப் பயன்படுத்துவதற்கு ஒப்பாக இருக்கும். இதுதான் வள்ளுவர் சொல்ல வந்த கருத்து. இதையே வேறொரு கோணத்தில் பார்த்திருக்கிறார் நல்வழி ஆசிரியர். வன்சொல் தோற்கும். மென் சொல் வெல்லும். என்பது நல்வழி நமக்குக் கூறும் கருத்து. அந்தக் கருத்து பொதிந்துள்ள பாடல் இதோ உங்களுக்காக... "வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில் பட்டு உருவுங்கோல் பஞ்சில் பாயாது-நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும்"                   - நல்வழி யானையின் மீது பட்டு துளைத்துச் செல்லும் அம்பானது, பஞ்சின் மேல் வீசுங்கால் அதே வேகத்தில் பாய்ந்து செல்லாது . இரும்பை வைத்து அடித்தாலும் பிளக்க முடி...

ஔவையின் கர்வம் தொலைந்தது

மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் நாவல் மரத்தில்  ஏறி நாவல் பழங்களைப் பறித்துத் தின்று  கொண்டிருந்தான். அவ்வேளை அவ்வழியாக வந்த  ஔவை நாவல் மர நிழலில் வந்து அமர்ந்தார்.  ஒளவையாரைப் பார்த்ததும்  அந்தப் சிறுவன்" பாட்டி, உங்களுக்கு நாவற்பழம் பழம் வேண்டுமா ? "என்று கேட்டான்.  ஒளவையாருக்கோ நல்ல பசி. " ஆமாம்.பசியாக இருக்கிறேன்.பழம் பறித்துப் போடுப்பா "என்றார் ஔவை.. "உனக்குச் சுட்டப்பழம் வேண்டுமா அல்லது சுடாதப்பழம் வேண்டுமா "என்று கேட்டான் அந்தச் சிறுவன் . ஒளவைக்கு அந்தச் சிறுவன் கேட்ட  கேள்விக்கான பொருளை உடனடியாக புரிந்துகொள்ள முடியவில்லை. அதென்ன சுட்டப்பழம், சுடாதப்பழம் என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டார்.ஆனாலும் தனது அறியாமையை சிறுவனுக்கு முன்னால் காட்டிக் கொள்ள மனமில்லை.  சரி ,எனக்குச் சுட்டபழமே பறித்துப் போடு என்றார்.  உடனே சிறுவன் மிகவும் கனிந்த பழங்களைப் பறித்து கீழே மணல் மீது போட, ஒளவையாரும் அவற்றை எடுத்து அப்பழங்களின்மீது ஒட்டிக்கொண்டிருந்த மணல் போகும்படி வாயால் ஊதிக்கொண்டிருந்தார். அச் செயலைப் பார்த்த அச் சிறுவன் "என்ன ....பாட்டி, பழங்கள் சுடு...

இதயம் கனக்கிறது

Image
கண்ணீர் அஞ்சலி இதயம் கனக்கிறது வெறுமை தெரிகிறது எங்கிருந்தோ வந்தாய் எழுதா எழிலோவியமாய் இதயத்தில் எழுத வைத்தாய் என்னோடு எழும்பி என் முகம் பார்த்து  என் பின்னே முகம் தூக்கி நிற்பாய்  நீ நின்ற இடத்தில்  நிற்பாய் என்ற நினைப்போடு திரும்பிப் பார்க்கிறேன் வெறுமை தெரிகிறது  இதயம் கனக்கிறது வெளியில் சென்றுவிட்டு நான் திரும்பும் வரை மணிக்கணக்காய்க் கதவருகில் காத்திருப்பாய் காலன் அழைத்ததுமே காத்திருக்க மனமில்லாது காலனோடு கால்போட்டுச் சென்றதேனோ? பான்ட் என்ற பெயரிருந்தும் பந்தத்தை அறுத்து விட்டு  பாதியிலே என்னைப் பரிதவிக்க விட்டதேனோ? இதயம் கனக்கிறது  வெறுமை தெரிகிறது  பார்வையாலே பேசி நெகிழ வைத்தாய் மகிழ வைத்தாய் மொத்தமாய் மனதை அள்ளி எங்கே   மறைந்தார்? நா தொட்டு அன்பைப் பகிர்ந்தவனே நாவசைப்பாய் என நான் காத்திருக்க நாவாடாது  நீ கிடந்ததேனோ? இதயத்தில் எழுதி வைத்த ஓவியமே ஓவியத்தைக் கலைத்துவிட்டு   ஓரமாய்  ஒதுங்கிப் போனதெங்கோ? இதயம் கனக்கிறது  வெறுமை தெரிகிறது நெஞ்சு பொறுக்குதில்லையே குட்டி நீயில்லா இடம் இன்று நீரில்லாத இடம் ...

பழமுறத்தால் சாடினாள்...

பழமுறத்தால் சாடினாள்  ஒரு சமயம் ஔவையார் வழி நடந்த களைப்பு தீர ஓரிடத்தில்  அமர்ந்திருந்தார். அவ்வழியாக வந்த ஒரு  மனிதன் ஒரு வயதான அம்மா களைப்பாக இருப்பதைப் பார்த்து அருகில் வந்தான். அவர் நிலையைக் கண்டு மிக மனம் வருந்தினான். அவருடைய வாடிய தோற்றம் அவன் உள்ளத்தை உருக்கியது. அவரிடம் "எங்கிருந்து வருகிறீர்கள் அம்மா? "என்று அன்போடு விசாரித்தான்.  ஔவையும், "தான் தொலை தூரத்திலிருந்து வருவதாகவும் நெடுநேரம் நடந்ததால் பசியாக இருக்கிறேன். சற்று அமர்ந்து விட்டு சென்றால் களைப்பு நீங்கிவிடும் என்று அமர்ந்திருக்கிறேன்" என்றார் சோர்வாக. அந்த அம்மாவின் நிலைமைக்காகப்  பரிதாபப்பட்டு, அவருடைய பசியைப் போக்க எண்ணி "அம்மா, தாங்கள் பசியோடு இங்கிருந்து செல்ல வேண்டாம். என் வீட்டிற்கு வந்து பசியாற்றிவிட்டு, அதன் பிறகு செல்லலாம்."என்று  அழைத்தான். ஔவை அதிக பசியோடு இருந்ததால் எதைப்பற்றியும் யோசிக்காமல் அவன் அழைப்பை ஏற்று அவன் கூடவே அவன் வீட்டிற்குச் சென்றார். இருவரும் நடந்து வீட்டின் அருகே வந்து சேர்ந்தனர். இதுவரை அவன் தன் மனைவியைப் பற்றி அடியோடு மறந்துவிட்டான்.  வீட்டிற்கு அருகில் ...

அன்பிலாள் இட்ட அமுது

அன்பிலாள் இட்ட அமுது  பந்தியில் சாப்பிட அமர்ந்ததும்  எப்போது சாப்பாடு பரிமாறுவார்கள். சாப்பிடலாம் என்று தோணும். காரணம் கண்முன்னே வந்து போகும் சாப்பாடும் அதன் மணமும். சாப்பிட அமர்ந்திருப்போம். ஆனால் சாப்பாடு பரிமாறுகிறவரின் பார்வையும் நடந்துகொள்ளும் விதமும் நம்மை சாப்பிட விடாமல் தடுக்கும். அதனால்தான் ஔவை, " உண்ணீர் உண்ணீர் என்று  ஊட்டாதார் தம்மனையில்  உண்ணாமை கோடியுறும்" என்றார். கொடிது கொடிது பசி மிகமிகக் கொடிது.  ' பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்' என்பார்கள்.  பசி ருசி அறியாது.பசியில் யார் எவர் தருகிறார் என்று ஆராய்ந்து பார்க்க மாட்டோம். எந்த இடத்தில் இருந்தும் சாப்பிடுகிறோம்.  பசியாறிய பின்னர் நாம் இந்த இடத்தில் நின்றா உண்டோம் என்று நம்மையே நாண வைக்கும். அவமானமாக உணர வைக்கும். அங்கேயும் இங்கேயும் பார்க்க வைக்கும். நம் தரம் தராதரம் என்று எதையும்  பார்க்க விடாது. இதுதான் பசியின் குணம். இப்படித்தான் ஒருமுறை ஔவையாரையும் பசி வாட்டி வதைத்தது.   ஆனால் யாரிடமும் கேட்டு வாங்கி உண்ண மனம் ஒப்பவில்லை. அப்போது ஒருவர் ஔவையை தன் வீட்டில் வந்து உணவருந்தும்...

பாராட்டும் இடங்கள்

Image
பாராட்டும் இடங்கள்  யாரை எங்கே  எந்த இடத்தில் பாராட்ட வேண்டும்  என்று தெரிந்திருக்க வேண்டும். உற்சாக மிகுதியால் பாராட்டுகிறேன் என்று கண்ட இடத்தில் யாரையும் பாராட்டிப் பேசிவிடக் கூடாது. அதற்கென்று சில நெறிமுறைகள் உண்டு. தான் செய்யும் செயலுக்கான அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது இயல்பு. ஒரு பள்ளி மாணவனை ஆசிரியர் சக மாணவர்கள் முன்னிலையில் புகழ்ந்து பேசி முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டால் போதும். அவனுக்கு யாரோ தன் தலையில் கிரீடம் வைத்துவிட்டது போன்ற உணர்வு ஏற்படும். இன்னும் நம் ஆசிரியரிடமிருந்து பாராட்டினைப் பெற்றுவிட வேண்டும்  என்று முனைப்போடு படிப்பான். அந்தப் பாராட்டுகளைக் காலம் உள்ளவரை மறக்க மாட்டான். ஒருவரின் சொல் அல்லது செயல் நம்மைப் பெரிதும் கவர்கிறது அல்லது  மகிழ்ச்சிப்படுத்துகிறது என்றால்‌ நம் மனது தானாக அவர்களைப் பற்றி புகழத் தொடங்கி விடும்.  மனம்  பாராட்டுப்  பத்திரம் வாசிக்க வைக்கும். ஒருவரை அப்போதைக்கப்போது பாராட்டலாமா என்றால் ....கூடாது என்கிறார் ஔவை. ஒருவரைப் பாராட்டுவதற்குக்கூட நேரம் காலம் பார்த்துதான்   பாராட்ட வேண்டுமா...

சொல்லாமலே...

சொல்லாமலே... நெடுநேரம் யோசித்துப் பார்த்தாள். ஒன்றும் புரியவில்லை. கலங்கலான நீருக்குள் கிடக்கும் கல்போல தெரிந்தும் தெரியாமலும்  உள்ளுக்குள்ளே கிடந்து ஒரு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தது. கேள்விகள் அடுக்கடுக்காக வந்து வரிசை கட்டி நிற்கின்றன. எந்தக் கேள்விக்கும் தன்னிடம்  சரியான விடையில்லை. விடை இல்லை என்பதை விட  விடை காணத் தெரியவில்லை. நிகழ்ந்தவை யாவும் புரிந்தும் புரியாமலும் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது. என்ன சொல்வது? ஒன்றும் புரியாத மனநிலையில் அப்படியே மனதிற்குள் போட்டுப் புதைத்துவிட்டு  ஒன்று தெரியாதவள் இருப்பதுதான் சரி என்ற முடிவோடு இருந்தாள் . பத்து நிமிடம் கூட சும்மா இருக்க முடியவில்லை. உள்ளுக்குள் ஏதோ குடைவதுபோல இருந்தது. கால்கள் எங்கெங்கோ இழுத்துச்  சென்றன. மனம் நிலை கொள்ளாதபடி மறுபடியும் மறுபடியும் அந்த இடத்திலேயே போய் நின்றது. விரல்கள் கோணல்மாணலாக  நாட்டியம் ஆடியது. கால்களில் வியர்ப்பது போன்றிருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை  அந்த நினைவுகள் அவளை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. ஆனால் அந்தநாள்.... நினைவுகள் உள்ளுக்குள் ஓர் இன்பத்...

திருமண வாழ்த்து

திருமண வாழ்த்து  விழுதென உறவுகள்  உடனிருக்க நன்றென இறைவன் நினைத்திருக்க மணமகன் ஜெபன் கரம் பிடிக்க மணமகள் மெர்லின்  உடன் நடக்க சிறுபுள்ளாய்  இணையர் சிறகடிக்க ஆல் போல் வாழ்வு தழைத்திருக்க அருகு போல் பரம்பரை நிலைத்திருக்க மூங்கில்போல் சுற்றம்  தழுவி நிற்க இறைவன் அருள் இல்லம் நிறைந்திருக்க  வாழ்வீர் என்றும் நலமாக வாழ்த்துகிறோம் மனம் நிறைவாக  வாழ்க பல்லாண்டு  மகிழ்வாக!                     -  செல்வபாய் ஜெயராஜ்

கண்ணதாசன் பாடல்களில் இலக்கியம்

கண்ணதாசன் பாடல்களில் இலக்கியம்  "பழையன கழிதலும்  புதியன புகுதலும் வழுவல " அதற்காக முற்றிலுமாக பழைமையைப் புறந்தள்ளிவிட்டுச் சென்றுவிட முடியாது. பழைமையை புதிய கண்ணோட்டத்தில் எடுத்துச் செல்வது புத்திசாலித்தனம். அந்த வகையில் பழைய இலக்கியப் பாடல்களின் கருத்தாளுமையைத் தங்களது திரையிசைப் பாடல்களில் புகுத்திய பெருமை திரைப்பட பாடலாசிரியர்களுக்கு உண்டு.  முன்னைப் பழைமைக்கும் இன்றைய   புதுமைக்கும் பாலமாக இருந்து எழுதியப்  பாடல்கள் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.  சொல்லப் போனால் பழைய இலங்கியங்களில்   உள்ள கருத்துக்களை மக்களிடையே கொண்டு   சேர்த்த பெருமை திரைப்படப் பாடலாசிரியர்களுக்கு   உண்டு.  அவர்களில் முக்கியமானவர்கள் என்று கவியரசு  கண்ணதாசன் , கவிப் பேரரசு வைரமுத்து, வாலி  என்று ஒரு சிலரை மட்டும் குறிப்பிட்டுவிட்டு  கடந்து போக முடியாது.  நிறைய பாடல்கள் எழுதிய கவிஞர்களின்  பாடல்களில் மட்டுமல்ல.  ஒரு சில பாடல்கள் எழுதிய கவிஞர்களின்  பாடல்களிலும் கண்டிப்பாக இலக்கிய தாக்கம்  இருக்கும்....