Posts

Showing posts from November, 2021

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ ?

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? " வெற்றி வேண்டுமா  போட்டுப் பாரடா எதிர்நீச்சல்  அட சரிதான் போடா தலைவிதி என்பது வெறுங்கூச்சல்....." பாடலைக் கேட்கும்போது நன்றாகத்தான் இருக்கிறது. எதிர்நீச்சல் போடும்போதல்லவா தெரியும் எத்தனை குட்டிக்கரணம்  போட வேண்டும் என்பது.... முள்ளில் விழுந்து முடங்கில் நொடிந்து கல்லில் முட்டி சுழியில் உருண்டு பிரண்டு ஒருவழியாக கரையேறும்முன் மூச்சு ஆயிரம் முறை அடங்கிப் போயிருக்கும். அதனால்தான் நமக்கு எதற்கு இந்த வம்பு. இப்படியே ஒதுங்கிப் போய்விடுவோம். என்று ஒரு முடிவெடுத்துவிடுவோம். இப்படி ஒதுங்கி ஒதுங்கி பதங்கிபதுங்கி பம்மிப் பம்மியே பாதி நாட்களைத்  தொலைத்திருப்போம். உழைக்க மறந்திருப்போம். சீச்சீ...இந்தப் பழம் புளிக்கும் என்று வெற்றிப் பக்கமே தலைவைத்துப் படுக்காதிருப்போம். இதுதான் நிதர்சனமான உண்மை. நாம் பாட்டுக்கு மூலையில்  முடங்கிக் கிடந்திருப்போம் தொலைந்தவர்களை தொலையட்டும் என்று இந்த உலகம் விட்டுவிடுமா என்ன ? தொலைந்தவர்களைத் தேடிப் பிடித்து தொல்லை தருவதில் வல்லவர்களாயிற்றே! நம்மைச் சும்மா விட்டுவிடுவார்களா? வேண்டுமென்றே ஓடும் நீருக்குள் தள்ளி க...

தெய்வம் தொழாஅள் கொழுநன்.... .....

தெய்வம் தொழாஅள் கொழுநன்..... " தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை "                       குறள் : 55 தெய்வம் - கடவுள் தொழாஅள் - தொழாதவள் கொழுநன் - கணவன் தொழுது - வணங்கி எழுவாள் -  எழுந்திருப்பவள் பெய் - பொழிவாயாக என - என்று சொல்ல பெய்யும் - பொழியும்  மழை - மழை   தெய்வத்தைத் தொழாமல் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயில் எழுகிறவள் பெய் என்று சொல்ல மழை  பெய்யும். விளக்கம் : இல்லற மாண்பை வலியுறுத்த வந்த வள்ளுவர் கற்பெனும் திண்மை கொண்ட பெண் கட்டளையிட இயற்கை கடந்த நிகழ்வுகளும் நிகழ வாய்ப்புள்ளது என்பதை இந்தப் பாடலின் மூலம் கோடிட்டுக் காட்டியுள்ளார். வள்ளுவர் எந்த தெய்வத்தையும் வணங்க வேண்டாம். கணவனை மட்டுமே தொழுதால் போதும் என்று சொல்லிவிட்டாரா ?  இப்படி ஒரு கேள்வி உள்ளுக்குள் எழாமல் இல்லை. அது எப்படி திருவள்ளுவரால் சொல்லமுடியும் ?  வள்ளுவர் கடவுள் வாழ்த்து எழுதும்போது, " கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை"  என்று சொல்லியிருக்கிறாரே.  அதாவது கடவுளின்...

வினைமுற்று

          வினைமுற்று ஒரு பொருளின் செயலை அல்லது தொழில் நிகழ்ச்சியை  உணர்த்தி நிற்பது வினைச்சொல் எனப்படும். படித்தல், தொழுதல் உழுதல் போன்றவை வினையை  உணர்த்துகின்றன.   செயல் அல்லது தொழிலைக் குறித்து வந்த  முற்றுப்பெற்ற சொல் வினைமுற்று எனப்படும். எடுத்துக்காட்டாக' பாடினார்' என்ற சொல்லை எடுத்துக் கொள்வோமானால் இது வினையின் முடிவைக் குறிக்கிறது. கதிர் ஓடினான் செல்வி பாடினாள். தலைவர் பேசினார். மயில் ஆடியது. பறவைகள் பறந்தன. இந்தச் சொற்றொடர்களில் ஓடினான், பாடினாள், பேசினார், ஆடியது, பறந்தன ஆகிய சொற்கள் பெயர்ச்சொல்லுக்குத் துணையாக நின்று தொடரின் பொருளை முடித்துக் காட்டியுள்ளதால் இவை வினைமுற்று எனப்படும். வினைமுற்றானது தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இரண்டு வகைப்படும். தெரிநிலை வினைமுற்று : திணை, பால் ,எண், காலம் ஆகியவற்றை வெளிப்படையாக உணர்த்தி நிற்கும் வினைமுற்று தெரிநிலை வினைமுற்று எனப்படும். மாணவன் பாடம் படித்தான். இதில் படித்தான் என்றசொல் வினைமுற்று ஆகும். திணை -  உயர்திணை பால் -  ஆண்பால் எண்  - ஒருமை காலம் - இறந்த காலம் தெ...

மனைமாட்சி இல்லாள் கண் இல்லாயின்......

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் ..... மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்"                                                                   குறள் : 52 மனை- மனைக்கான மாட்சி - நற்பண்பு இல்லாள்கண் - மனைவியிடத்தில் இல்லாயின் - இல்லாதிருக்குமாயின் வாழ்க்கை - வாழ்வானது எனைமாட்சி - எவ்வளவு பெருமைக்குரியதாக ஆயினும் - இருந்தாலும் இல் - பயனில்லாததாகி விடும்        இல்வாழ்க்கைகுக்கு ஏற்ற நற்பண்பு மனைவியிடம் இல்லாது போனால் ஒருவனுடைய வாழ்க்கை வேறு எந்த சிறப்புடையதாக இருப்பினும்  அது பயனில்லாதது ஆகிவிடும். விளக்கம் : மனைவி நற்குண நற்செய்கைகள் உடையவளாக இருக்க வேண்டும். நல்லறம் பேணும் நற்பண்பு கொண்டவளாக இருக்க  வேண்டும். அப்படிப்பட்ட நற்பண்பு இல்லா மனைவி வாய்க்கப் பெற்றால் ஒருவன் எத்துணை சிறப்புகள் பெற்றிருப்பினும் அவற்றால் எந்தப் பயனும் இல்லை. செல்வமும் புகழும் இருந்தால் மட்டும் போ...

தன்னம்பிக்கை

Image
தன்னம்பிக்கை        " ஒல்வது  அறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல்" "ஒருவர் தனக்கு இயலும் செயலையும்  அதைப்பற்றிய அறிவையும் பெற்று  தன்னம்பிக்கையோடு உறுதியாக செயல்படும்போது அவரால் முடியாதது என்று எதுவும் இருக்க முடியாது" என்கிறார் வள்ளுவர்.  " தோல்வி உன்னைத் துரத்துகிறது என்றால்   வெற்றி உன்னை நெருங்குகிறது"   என்பார் மாவீரன் நெப்போலியன்.   எவ்வளவு தன்னம்பிக்கை தரும் வரிகள் பாருங்கள்.      தோல்வி வந்து துவண்டு நிற்கும்போது கூட   கண்ணுக்கு எட்டும் தூரத்தில்தான்   வெற்றி இருக்கிறது என்ற நம்பிக்கையை   வளர்த்துக்கொள்ளுங்கள்.   வெற்றி உங்கள் கைவசம் என்பதைத்தான்   அவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார்.      முதலாவது நம்மீது நமக்கு நம்பிக்கை    இருக்க வேண்டும்.   நம்மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே   எந்தச் செயலையும் முழு ஈடுபாட்டுடன்   செய்து வெற்றி காண முடியும்.    ஒரு நேர்முகத் தேர்வுக்கு ஐந்துபேர் அழைக்கப்பட்டிருந்தனர். தே...

ஆழ அமுக்கி முகக்கினும்...

ஆழ அமுக்கி முகக்கினும்.... ஆழ அமுக்கி முகக்கினும்  ஆழ்கடல்நீர் நாழி முகவாது .... ...." இது ஔவையின்  மூதுரையில் உள்ள ஓர் அருமையான பாடல்.  கருத்துள்ள பாடல். வயிற்றுக்கு உணவில்லாத போதெல்லாம் நினைத்துப்பார்க்க வைக்கும் பாடல்.  வெறுமனே உணவுக்கான பாடல் மட்டுமல்ல. அறிவியல் கருத்துள்ள பாடல்  என்றே சொல்ல வேண்டும்.   பாடல் பாடிய களம் எப்போதும்போல போகிற போக்கில் ஔவை பாடியதாக இருந்தாலும்  பாடலின் கருத்து நம்மை நின்று  கேட்க வைக்கிறது. நிமிர்ந்து பார்க்க வைக்கிறது. உலக நடைமுறையும் இதுதானே என்று உணர வைக்கிறது. எதுவும் கொடுத்து வைக்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்தக் கொடுப்பினை எல்லோருக்கும் அமைந்துவிட்டது. கண்முன்னே உணவிருக்கும் உண்ண முடியாது. சில நேரங்களில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமலேயே போய்விடும். சட்டி நிறைய உணவு இருந்தாலும் கடைசி நேரத்தில் சாப்பிடமுடியாமல் போய்விடும்.சூழ்நிலை அப்படி அமைந்துவிடும். ரயில் பயணங்களில் போது அனைவரும் ருசித்து வாங்கிச் சாப்பிடும் ஒருபொருளை வாங்கிச் சாப்பிட ஆசைப்பட்டு நாமும் வாங்க செல்வோம். ஆனால் நாம் போன நேரம் பார்த்து அந்த...

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? இழப்பு என்பது  இதுவும் கடந்து போகும் என்று எளிதாக சொல்லிவிட்டு கடந்து போகக்கூடியதல்ல. ஆறா ரணத்தைக் கொடுக்கக் கூடியது.  நினைவுகள் நம்மைவிட்டு அகலாது. எங்கோ ஒரு மூலையில் நம்மோடு பயணித்துக் கொண்டே இருக்கும். மறந்தது போல இருக்கும். ஆனால் மறக்காது. அவர்கள் இருந்த இடத்தைப் பார்க்கும்போது அப்படியே கலங்கிப் போவோம்.  அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் வீட்டில் இருந்து அவர்களை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். அவர்களோடு பழகிய நாட்களில்  பேசிய பேச்சு நினைவில் வந்து தூங்கவிடாமல் செய்யும். இவை யாவும் மறுபடியும் மறுபடியும் நினைவுபடுத்திக் கொண்டேதான்  இருக்கும். இப்படித்தான் ஒரு புலவருக்கு ஒரு மன்னன் இறந்துபோன பின்னர் மன்னனின் நினைவு வந்து மிகவும் கலக்கத்தைத் தந்து கொண்டே இருக்கிறதாம். அந்த நினைவை கவிதையில்  சொல்லியிருக்கிறார். அந்த நினைவை நம் கண்முன்  கொண்டு வருவதற்காக அவர் உயிரோட்டமுள்ள இன்னொரு கதையைச் சொல்லியிருக்கும் விதம் நம்மையும் கண் கலங்க வைக்கிறது. அது என்னவென்று பார்ப்போம். வாருங்கள். " பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த பெருங்க...

இரட்டுற மொழிதல்

இரட்டுற  மொழிதல் என்றால் என்ன ? விவசாயி ஒருவர் தன் தோட்டத்து வாயிலருகே வந்து கொண்டிருக்கிறார். அங்கே தன் பருத்தி வயலில் ஆடு ஒன்று மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தும் பதறிப் போய்விட்டார். அங்கே நின்று கொண்டிருந்த தொழிலாளியிடம் "ஆடுறா....ஆடுறா "என்று கத்தினார். தொழிலாளிக்கு தன் முதலாளி ஏன் இப்படி கத்துகிறார் என்பதைச் சட்டென்று புரிந்துகொள்ள முடியவில்லை. தண்ணீர் பாய்த்துக்கொண்டு நிற்பவனிடம் ஆடச் சொன்னால்..... கையில் இருந்த மண்வெட்டியை அப்படியே வீசிவிட்டு ஆடத்தொடங்கினான். "அடே முட்டாள்...ஆடுறா..ஆடுறா..." திரும்பவும் கத்தினார். "நான் நன்றாக ஆடவில்லையா? மறுபடியும் கத்துகிறாரே "என்று நினைத்துக் கொண்டு மேலும் உற்சாகமாக ஆடினான். அதற்குள் முதலாளி அருகில் வந்து "வயலில் ஆடு மேயுதுடா என்றால்... நீ ஆட்டம் போடுறியாக்கும் "என்று கடிந்து கொண்டார் . ஒடிச்சென்று  ஆட்டைத் துரத்தி விட்டுவிட்டு வந்த தொழிலாளி "என்ன முதலாளி...நீங்க முதலாவதே சரியா சொல்லியிருக்கலாமில்லையா.... இப்போ பாருங்க ஒரு பாத்தி பருத்திச்செடியை வெள்ளாடு மொட்டையாக கடிச்சி தின்னுப்புட்டுது" எ...

வேண்டாம்...வேண்டாம்

        வேண்டாம்....வேண்டாம் வேண்டும்... வேண்டும் நல்ல எண்ணம் இருக்க வேண்டும். செயலில் நேர்மை இருக்க வேண்டும். பேச்சில் இனிமை இருக்க வேண்டும். பழகுவதில் உண்மை இருக்க வேண்டும். இப்படி எல்லாவற்றிலும் வேண்டும்..வேண்டும் என்று நேர்மறையான சொல்லே இருக்க வேண்டும். அப்போதுதான் நம்மைச் சுற்றி நடப்பவை யாவும் நன்மையானதாக நடக்கும் என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டிருக்கிறோம்.  ஒரு எதிர்மறை சொல் வாயிலிருந்து   வந்துவிடக் கூடாது என்று பார்த்துப் பார்த்துப் பேசுவோம். ஆனால் இலங்கியங்கள் இவை எல்லாவற்றிற்கும் நேர் மாறானவை. இனியவை நாற்பது உண்டு என்றால் ஒரு இன்னா நாற்பதும் உண்டு. இனியவை நாற்பதைவிட எந்தவிதத்திலும் குறைபடாத சொல்லாட்சி கருத்தாளுமை ஆகியவற்றை இன்னா நாற்பதிலும் காணலாம். தீ என்று சொல்வதால் நாக்கு வெந்துவிடப்போவதில்லை. சர்க்கரை என்று சொல்வதால்  நாக்கு இனித்துவிடப் போதில்லை. எது எப்படியோ சொல்லப்படும் கருத்து உயர்வானதாக இருந்தால் நாம் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் அவை வேண்டும் வேண்டும் என்று நம்மோடு என்றும் நடைபயின்று கொண்டிருக்கும்.  வேண்டாம் என்ற...

வாழ்த்தி வரவேற்கிறேன்

வாழ்த்தி வரவேற்கிறேன் மகுடம் சூட்டிய நாள்முதலாக மணிமுடியில் வைரக்கற்களென நாளொரு திட்டம்  தந்து மக்கள் நல்வாழ்வுக்கு உறுதி செய்கின்றீர்! தங்கள் திட்டங்கள் அத்தனையும் படைத்து வருகிறது  புதிய வரலாறு அதனால் பெற்றுவிட்டீர் மதிப்பெண் நூற்றுக்கு நூறு! புகுந்த வீட்டில் மகிழ்வாக வாழ்ந்தாலும் பிறந்தவீட்டுப் பெருமை பேசும் சராசரி பெண்ணாக  தமிழகம் என் தாய்வீடு என்பதில்  எனக்குப் பெருமிதம் உண்டு தாயை இழந்தபின்  தாய்வீட்டுப் பெருமை பேசுவதில் ஏது மதிப்பு? ஏதிலியான மனநிலைதான் எம்மிடம் எப்போதும் உண்டு! தாயின் மடிமீது அமர்ந்திருந்து நிலாச்சோறு உண்டிருக்கும் குழந்தையை ஏக்கத்தோடு பார்த்து நிற்கும் அண்டை வீட்டுக் குழந்தை போல ஏக்கத்தோடு தமிழகத்தைப் பார்த்து நின்றேன்! "புலம் பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் "என்ற  ஒற்றை அறிவிப்பைத் தந்து உலகத் தமிழரின் உள்ளங்களைக் கற்றையாய் அள்ளிக் கொண்டீர்! "வா..தாய்வீட்டு அரவணைப்பும் பாதுகாப்பும் உனக்கும் உண்டு" என்றுரைத்த உம் கரிசனத்தை என்னவென்பேன்?  ஏது சொல்லி பாராட்டுவேன்? நன்றி என்ற மூன்றெழுத்தைச் சொல்லி அந்நியப்பட்டு நிற்க மனமில்ல...

வேளாண் பழமொழி

Image
வேளாண் பழமொழி வேளாண்மை இல்லா உலகும் இல்லை. வெள்ளாமை எதிர்பாரா உழவனுமில்லை" இது என்ன புதுமொழி என்பீர்கள். புதுமொழி இல்லைங்க... இந்த விவசாயி உள்ளத்தில் உதித்த  முதல் பழமொழிங்க... எல்லாம் ஒரு சிறிய முயற்சிதான்.... இப்போது பழமொழிக்கு வாங்க... 1 . "களை பிடுங்காத பயிர் காற் பயிர் " பயிரோடு சேர்த்து களையையும் வளரவிட்டால் களை தாங்க வளரும். களை பயிரை வளரவிடாது . களை மளமளவென்று வளர்ந்து பயிரை வளர விடாது கீழே அமுக்கி விடும். களை பயிரை வளரவிடாவிட்டால் பயிர் எப்படி சூரிய வெளிச்சத்திலிருந்து உணவு தயாரிக்கும்? அப்படியே கரண்டு போகுமே.... இதைத்தாங்க களை பிடுங்காத பயிர் காற்பயிர் என்பாங்க. 2.   " அகல உழுகிறதைவிட ஆழ உழு" எப்போதும் கலப்பையைப் பிடுச்சி உழு ...பிடிச்சி உழு என்பாங்க.  அதாவது கலப்பையை அழுத்திப் பிடித்து உழுதால்தான் ஆழ உழ முடியும். இதைத்தான் கலப்பையைப் பிடுச்சி உழு... பிடிச்சி உழு என்று சொல்லியிருப்பார்களோ! என்றோ கேட்ட ஒலி இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது. ஆழ உழுதால்தான் பயிரின் வேர் பூமிக்கு அடியில் வெகு தூரம் வரை சென்று நீரை உறிஞ்சி வைத்துக் கொள்ளும். அதன...

பணிநிறைவுப் பாராட்டு மடல்

  பணிநிறைவுப் பாராட்டு மடல் நாவில் தேனூறும் நல்லமணம் தூதாகும் ஆம்பூர்நகர் இணையர் ஜேசுதாஸ் ரெபேக்கா ஆசைமலர்க் கொடியாள் ஹெலன் மீராபாய் உக்கிரன்கோட்டை ஐயா லயனலின்                                              வயலினானார்! ஐயா லயனலுக்குக் கட்டித்தேன் அமுதத்தேன் மகளிரிருவர் வாய்த்த நல் வசந்தத்தேன் பெய்தேன் குழைஇல்லறம் இசைத்தேன் கண்டேன் மெய்த்தேன் இதுவென உவந்தேன்!  நார்த்விக் மேனிலைப்  பள்ளி துளிர்த்தேன்  செயினட்மேரி நேசனல் கல்லூரி அருந்தேன் மும்பைத் தமிழ்ப்பள்ளி தனித்தேன் தளிர்த்தேன் இன்பத்தேன்  மாணவர் விருப்பும் கூட்டுத்தேன்! சொற்தேன் தோய்த்த கல்வி சுவைத்தேன் மதித்தேன் மதி தேனெனென உணர்ந்தேன் நனித் தேனுண்டதுபோல்  மகிழ்ந்தேன் கனித்தேன் மொழிகேட்கத் தவம் கிடந்தேன்! அன்புத்தேன் உள்ளம் என்றும் அமுதத்தேன் பண்புத்தேன் பாசத்தேன் கொட்டும் அருவித்தேன் ஆசைத்தேன்  கொண்டேன் நட்பால் அரவணைத்தேன் பார்த்தேன் பாராட்ட வார்த்தைகளை மறந்தேன்! சொற்றேன் சுவைத்தேன் பொருட...

செய்தி சொல்லும் சேதி - 8

Image
" குளிர்பானம் குடித்த சிறுமி உடல்  நீல நிறமாக மாறி குளிர்பானம் குடித்த சிலமணி  நேரத்திற்குள் மரணம்" இது செய்தி. என்ன...குளிர்பானம் குடித்த சிறுமி மரணமா?  குளிர்பானம் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அனைவருக்கும்  அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா! எந்தக் குளிர்பானமாக இருக்கும்?  பெயரைத் தெரிந்து கொண்டால் மறுபடியும் அந்தக் குறிப்பிட்ட பெயர் கொண்ட குளிர்பானத்தைக் குடிக்காமல் தவிர்த்துவிடலாமே என்று மண்டைக்குள் ஒரே குடைச்சல். நாளிதழை நாள் முழுவதுமாக புரட்டிப் புரட்டிப் பார்த்து  பெயர் தெரியாமல்.... அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் எல்லோரிடமும்  விசாரித்திருப்போம். இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க ... இந்த அதிர்ச்சிக்கிடையேயும் நானெல்லாம் குளிர்பானம் குடிப்பதே இல்லை என்று உள்ளுக்குள் உவகை கொள்ளும் நபர்களும் இருக்கத்தான் செய்வார்கள். இதுதான் உலகம். பல நேரங்களில் யாரோ ஒருவர் வீட்டில் எங்கோ நடந்த ஒரு நிகழ்வு. அதனால் நமக்கு என்ன ?  என்ற நினைப்போடு செய்தியைப் படித்துவிட்டு அப்படியே கடந்து போயிருப்போம். நமக்கு இன்னார் மகள் இறந்துவிட்டாள் என்று  தகவல் தெரிவிப...

குறி கேட்கலாமா?

  குறி கேட்கலாமா? எக்கா...எக்கா..".என்றபடி ஓடி வந்தாள் பக்கத்து வீட்டுப் பெண் பார்வதி. "என்ன...என்ன...இப்படி ஓடி வருகிறாய்?.. ஏதும் பிரச்சினையா?" "ஆமாக்கா.... நீங்க எப்போதும் சொல்வீங்க.. அதுதான் ...அதுதான் " மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க படபடவென்று பேசினாள் பார்வதி. 'என்ன அதுதான்...அதுதான் என்கிறாய். அதுதான் என்ன என்று சொல்கிறாய். நிதானம்...நிதானம்.... தண்ணீர் குடிக்கிறியா?" "தண்ணீர் குடிக்கும் மனநிலையில் நான் இப்போது இல்லை" வியர்க்க விறுவிறுக்க படபடப்போடு நின்றிருந்தாள். "கொஞ்சம் தண்ணீர் குடி" என்று வலுக்கட்டாயமாக தண்ணீர் குடிக்க வைத்து ஆசுவாசப்படுத்தினேன். "நீங்க சொல்வீங்க இல்லையா...நாளிதழில் போடும் செய்திகள் எல்லாம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் என்று.. நான்தான் புரிஞ்சுக்கல..." "புரியாமல் அப்படி என்ன பண்ணிவிட்டாய்..?" "குறி சொல்வதுபோல் வந்து எல்லாவற்றையும் அள்ளிகிட்டுப் போயிட்டாளே அக்கா... நான் மோசம் போயிட்டேனே அக்கா..நான் மோசம் போயிட்டேனே!" "முதல்ல இந்த ஒப்பாரியை நிறுத்து. அல்லது பேச...