அன்னச்சேவலே....
அன்னச்சேவலே.... கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே நண்பர்களாக இருந்து வந்தனர் என்பது வரலாறு. பார்க்காமலேயே ஒருவரை ஒருவர் எப்படி நட்பு பாராட்டிக் கொள்ள முடியும்? இந்த அறிவியல் வளர்ச்சியில் எல்லாம் சாத்தியமாகிறது. முன்பு கடிதப் போக்குவரத்து கூட இல்லாத காலம். பின்னர் இது எப்படி சாத்தியமாயிற்று? இந்தக் கேள்வி நமக்குள் எழாமலில்லை. இன்றைய அறிவியல் வளர்ச்சியில் எல்லாம் சாத்தியப்படும் கூடியதுதான். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் அசுர வேகம் காணாமலே தகவல்களை அன்பை பரிமாறிக் கொள்ள உதவுகிறது. இது போக்குவரத்து வசதிகள் இல்லாத அன்றைய காலகட்டத்தில் சாத்தியமில்லாத ஒன்று. அப்படி இருக்க பிசிர்ந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் நட்பாக பழக வாய்ப்பே இல்லை. பிறகு எப்படி அவர்கள் இருவரும் நண்பர்கள் என்று உலகுக்கு தெரிய வந்தது. ஏதேனும் தூது விட்டு நட்பை வளர்த்துக் கொண்டிருப்பார்களா? இந்தக் கேள்விக்கு விடையளித்து நம்முன் வந்து சாட்சி சொல்ல வந்து நிற்கிறது ஒரு பாடல். இந்தப் பாடல் இவர்கள் இருவரின் நட்புக்கு நல்லதொரு சாட்சி. மேகத்தைத் தூது விடலாம். புறாவைத் தூது விடலாம்.நாரையை...