Posts

Showing posts with the label கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா-வாசுகி

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா " யார் சொன்னது? எந்தச் சந்தர்ப்பத்தில் சொன்னது? சற்று மாறுபட்ட  சொல்லாட்சியாக இருக்கிறதே என்ற கேள்வியும் தேடலும் அனைவர்க்கும் இருப்பது போலவே எனக்குள்ளும் எழுந்தது. திருமணவீடுகளில் தவறாமல் உச்சரிக்கப்படும் பெயர் வாசுகி. வானும் நிலவும் போல வள்ளுவரும் வாசுகியும் போல உடலும் உயிரும் போல வாழ்க என்ற வாழ்த்து இல்லாமல்  திருமண வாழ்த்து இருக்கவே இருக்காது. வள்ளுவரும் வாசுகியும் போல என்பதால் வள்ளுவரின் மனைவி வாசுகி என்பது நமக்குத் தெரிந்திருக்கும். வள்ளுவருக்கும்  வாசுகிக்கும் இருந்த உறவு எப்படிப்பட்டது என்பது  பள்ளிப்பருவத்தில் தமிழாசிரியர்கள் வாயிலாக கேட்டிருப்போம். அவற்றுள்  சில மறந்து போயிருக்கலாம். நினைவூட்டலுக்காகச்  சில செய்திகள் உங்களுக்காக... வாசுகி எப்படிப்பட்டவர் ? ஏன் வள்ளுவரின் வாசுகிக்கு இத்தனை மதிப்பு?  வள்ளுவரின் மனைவி என்பதினாலா? இருக்கலாம். மனைவி சிறப்பாக அமைந்தால் தான் ஒரு கணவனுக்கு ஏறுபோல் பீடு நடை இருக்கும். தான் செய்ய நினைத்ததைச் சிறப்பாகச் செய்ய முடியும். இல்லை நாம் கொண்டாடும் அளவுக்கு வேறு ஏதேனும் சிறப்பு குண...