தந்தையர் தினம்
தந்தையர் தினம் முந்நூறு நாள் சுமந்தவள் அம்மா. தோள்மீது சுமந்து ,உலகம் காட்டி ,ஒவ்வொன்றாய் அறிய வைத்து, நடைபயிற்றுவித்து,நன்மை தீமை அறிய வைத்து காலமெல்லாம் கூடவே நடப்பவர் அப்பா. இப்படிப்பட்ட அப்பா இல்லை என்றால் நாம் இன்று இந்த நிலைமையில் இருந்திருக்கவே முடியாது என்பது நிதர்சனமான உண்மை. அப்பாவின் சமபாதி அம்மா. ஆனால் அன்பில் சமபாதி கிடைக்காத அப்பாவி குழந்தை அப்பா. இதை என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா! நினைவுபடுத்திப் பாருங்கள்....உண்மை என்ன என்பது புரியும். அமெரிக்காவின் வாசிங்டன் நகருக்கு அருகிலுள்ள ஸ்போகன் என்ற இடத்தில் இதே போன்றதொரு ஞாயிற்றுக்கிழமையில் தேவாலயத்தில் அன்னையர் தின சிறப்பு பிராத்தனைக் கூட்டம் நடைபெற்றது. திரளான மக்கள் கூடியிருந்து போதனையைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பிராத்தனைக்...