Posts

Showing posts from August, 2024

காணாமல் போன கடிதங்கள்

காணாமல் போன கடிதங்கள்  செப்டம்பர் முதல் நாள். உலக கடிதம் எழுதும் தினம். கடிதம் எழுதுவது... கடிதம் வருமா என்று காத்திருப்பது எல்லாம் ஓர் அலாதியான இன்பம் என்று தான் சொல்ல வேண்டும். கடிதமா?எப்படி இருக்கும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம். இன்லாண்ட் லட்டர்,போஸ்ட் கார்டு, எல்லாம் காணாமல் போய்விட்டது. அனைவர் கைகளிலும் கைபேசி. நினைத்த வேளையில்  வாட்சப்பில் மெசேஜ் ,கைபேசியில் சுக துக்கங்கள்  விசாரிப்பு என்று மிக நெருங்கி  வந்துவிட்டோம் என்று நினைக்கிறோம். ஆனால் கடிதம் எழுதும்போது இருந்த எதிர்பார்ப்பு, நெகிழ்ச்சி, மகிழ்ச்சி இன்று காணாமல் போய்விட்டது  என்றுதான் சொல்ல வேண்டும். அந்தக்காலம் அது ஒரு கனாக்காலம்... கிராமப்புறங்களில்  ஒரு வீட்டுக்குத் தபால்காரர் வந்தால்  அவர் சைக்கிள் பின்னால்  பத்து பிள்ளைகள் நடந்து வரும். யானை வரும் பின்னே மணியோசை  வரும் முன்னே என்பதுபோல ஒன்றிரண்டு சிறுவர்கள் பாட்டியோ...  பாட்டியோ... பாட்டியோ.... உங்கள் வீட்டிற்கு  லட்டர் வந்துருக்கு என்று  மூச்சிரைக்க ஓடிவந்து  சொல்வார்கள். அந்த வீட்டுப் பாட்டிக்க...

ஆழ அமுக்கி முகக்கினும்...

ஆழ அமுக்கி முகக்கினும்.... கன் என்று ஓர் ஏழை விவசாயி இருந்தான்.அவனுக்கு வள்ளி என்று ஓர் அருமையான  மனைவி வாய்த்திருந்தாள். வாய்க்கு ருசியாக வகைவகையாக உணவு சமைத்துக் கொடுப்பாள். ஏகன் வயலிலிருந்து வருவதற்கு முன்னர் சமைத்து வைத்துவிட்டு வீட்டுத் திண்ணையிலேயே ஏகன் வருகைக்காகக் காத்திருப்பாள். ஒருநாள் ஏகன் வரகு சோறு சமைத்து வைக்கும்படி சொல்லி விட்டுச் சென்றான். வள்ளியும் ஏகன் சொல்லியது போல வரகு சோறும் கறியும் சமைத்தாள். சமையல் முடிந்ததும் ருசி பார்ப்பதற்காக சிறிது வரகு சோறும் கறியும் ஊற்றி சாப்பிட்டுப் பார்த்தாள். அடடா....என்ன பிரமாதம்! என்றுமில்லாத படி இன்று உணவு இவ்வளவு சுவையாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் சாப்பிடுவோம் என்று மறுபடியும் எடுத்து சாப்பிட்டாள். இன்னும் ஆசை தீர்ந்தபாடில்லை. உணவின் சுவை இன்னும் கொஞ்சம் சாப்பிடு...இன்னும் கொஞ்சம் சாப்பிடு என்று சுண்டி இழுத்தது. அந்த ஈர்ப்பில் மறுபடியும் மறுபடியும் சாப்பிட்டு பானையில் இருந்த மொத்த சோற்றையும் சாப்பிட்டு முடித்து விட்டாள் வள்ளி. உண்ட மயக்கம் தொண்டர்களுக்கும் உண்டல்லவா? வள்ளியை மட்டும் விட்டு வைக்குமா என்ன? அப்படியே தூங்கிவிட்டாள்...

முடியும் என்று நம்பு

முடியும் என்று நம்பு  முடியும் என்ற நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை.முழு படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. முதல் படி ஏறு" என்பார் மார்ட்டின் லூதர் கிங். ஆமாம் உன்மீது நம்பிக்கை வைத்து முதற்படியில் கால் வைத்தால் போதும். மீதிப் படிகளையும் ஏறி நீ சிகரம் தொட்டுவிடலாம். எத்தனைப் படிகள் என்பது முக்கியமல்ல. எப்படியும் நடந்துவிடலாம் என்ற தன்னம்பிக்கை மட்டும் போதும். என்னிடம் என்ன இருக்கிறது என்று எண்ண வேண்டாம்.  மரங்களைக் குடைய  மரங்கொத்தி கோடாரி கொண்டு  செல்கிறதா?  இல்லையே...தனது ஒற்றை அலகை நம்பி  வைரம் பாய்ந்த மரத்திலும்   கூடு அமைந்துவிடுகிறது... நம்மால் மட்டும் கூடாதா என்ன? போராட வந்த பின்னர் புறமுதுகிட்டு ஓடலாமா? கழனியில் இறங்கிய பின்னர் சகதியாகிறது என்று காலைத் தூக்கலாமா?  இருட்டினில் நடக்கும்போது கால் ஒலி கேட்கத்தான் செய்யும். மழையில் நடக்கும்போது குடை பிடித்தாலும்  கால் நினையத்தான் செய்யும். கால் நனைகிறதே என்றால் வெளியில் செல்வதெப்போது? கரை சேருவோம் என்ற  நம்பிக்கையில்தான் கப்பலில் ஏறுகிறோம். கடலில் கப்பல் கவிழ்...

காக்கை கரைத்தால் விருந்தாளி வருவாரா?

காக்கை கரைத்தால்.... விருந்து வருமாயின் கரைந்து காட்டு. வாராதாயின் நடந்து காட்டு" இப்படி காக்கையைப் பார்த்து  பள்ளிப் பருவத்தில் கூறியிருப்போம். காக்கை காலையில் இருந்தே கரைந்து கொண்டிருந்தால் இன்று நம்ம வீட்டுக்கு விருந்தினர் யாராவது வரப் போகிறார்களா? என்று அம்மா சொல்வதையும் கேட்டிருப்போம். இப்படி விருந்தினர் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த காலம் ஒன்று உண்டு. ஒரு காலத்தில் விருந்துக்கு  கட்டியம் கூறும் கட்டிடயங்காரர்  நம் காக்கை யாராகத்தான் இருந்திருக்கிறார். விடுதியில் தங்கி படிக்கும்போது "கடிதம் வந்தால் பறந்து போ பார்வையாளர் வந்தால் நடந்து போ "என்று காக்கை பின்னால் இருந்த காலங்களும் உண்டு. இப்படி ஒரு நம்பிக்கை.  இது மூட நம்பிக்கையாகவும் இருக்கலாம். எது எப்படியோ அதனால் கிடைப்பது ஒரு சின்ன மகிழ்ச்சி.  காக்கை பறந்து போய்விட்டால் கடிதம் வரும் என்று தபால்காரரையே எதிர்பார்த்து இருந்த நாட்களும் உண்டு. காக்கை இருந்து பனம்பழம் விழுந்த கதையாக கடிதம் வந்து விட்டால் போதும் நான் சொன்னேன் அல்லவா? .....நான் சொன்னேனல்லவா? காக்கை பறந்து போனது என்று.... இதோ பார்... எனக்குக்...

பிறந்தநாள் வாழ்த்து