உவப்பத் தலைக்கூடி
உவப்பத் தலைக்கூடி..... உவப்பத் தலைக்கூடி இருக்கும் அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் முதல் வணக்கம். பள்ளி வளாகத்தில் கால்பதித்ததும் சில்லென்று துளிர்விட்ட நினைவுகள் என்னைச் சிலிர்க்க வைத்தது. எதிரே உங்கள் முகங்களைக் கண்டதும் சொல்ல முடியாத மகிழ்ச்சி என்னைத் திக்குமுக்காட வைக்கிறது. இதோ இங்கே நிற்பது நானா...? நானா .... நான்தான் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேனா? நினைத்துப் பார்க்க முடியாத இன்ப அதிர்ச்சி. உங்களோடு என் அன்பைப் பகிர்ந்துகொள்ள இப்படியொரு வாய்ப்பை வரமாக அளித்த இறைவனுக்கு முதலாவது நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். காலம் வரைந்துவிட்ட கோலம் நம் அனைவர் முகத்திலும் தெரிகிறது. கண்கள் அதே பழைய துடிப்புடன் கூடிய நினைவில். பேசாதவற்றைப் பேசத் துடிக்கும் உதடுகள். என்னப் பேசுவது எனத் தெரியாத ஊமைமொழிப் பரிமாற்றங்கள். நலமா எனக் கேட்கும் பாசப் பிணைப்பு பார்வையில். இவை யாவும் என்னை எங்கெங்கோ கொண்டு செல்கின்றன. அனைவர் கண்களிலும் ஏதோ ஒரு பனிமூட்டம். எதையோ காணாததொரு வாட்டம். ஆசிரியர் முகம் காண வேண்டும் என்ற தேட்...