இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை அனைவருக்கும் சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும்.வீடு இல்லாதவர்களுக்கு வீடு வேண்டும் என்று ஆசை. வீடு கிடைத்துவிட்டால் வீட்டைச் சுற்றி தென்னைமரங்கள் இருந்திடல் வேண்டும் என்று ஆசை. தென்னை மரங்கள் இருந்துவிட்டால் போதுமா? அதில் குலைக்குலையாக இளநீர் காய்த்துத் தொங்க வேண்டும் என்ற ஆசை வந்துவிடும். அதுவும் நடந்துவிட்டது. இப்போது முற்றத்தில் முத்துச் சுடரொளி பரப்பி நிலவு வந்து எட்டிப் பார்த்துச் சிரிக்க வேண்டும் என்ற ஆசை. இரவினில் நிலவு வந்து போயிற்று. இனி அதிகாலையில் குயில்கள் கூடி வந்து கத்திச் செல்ல வேண்டும் என்று ஆசை. குயில்கள் கத்தினால் மட்டும் போதுமா? கூடவே பூந்தென்றல் காற்று வர வேண்டாமா? தென்றல் வந்து காதோடு கவிபாடிச் செல்ல வேண்டும் என்று ஆசை. இத்தனை ரம்மியமான சூழலில் அழகானவீடு இருந்தால் மட்டும் போதுமா? இல்லத்தில் இருந்து ஆட்சி செய்ய ஒரு பத்தினிப் பெண் வேண்டாமா? அவள் இல்லாமலா? இல்லம் என்று இருந்தால் அதில் இல்லாள் இருந்தால்தானே மகிழ்ச்சி. இப்படி ஒரு ஆசை யாருக்கு வந்திருக்கும் என்று நினைக்...