நாலுகோடி
நாலுகோடி மன்னர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைதான் சாசனம். மன்னன் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது. மன்னர்களால் வாழ்ந்தவர்களும் உண்டு. வீழ்ந்தவர்களும் உண்டு. வாய் தவறி வந்த வார்த்தைகள்கூட ஆணையாகி சில நேரங்களில் ஆபத்துக்களைத் தந்துண்டு. இங்கே சோழ மன்னர் ஒருவருக்கு திடீரென்று ஒரு ஆசை. புலவர்களை ஏராளமான பாடல்கள் பாட வைத்து அதனைக் கேட்டு இன்புற வேண்டும் என்று நினைக்கிறார். ஆசை இருக்கலாம். தப்பில்லை. அதுவும் இப்பவே வேண்டும் என்று அடம்பிடிப்பது போன்ற ஒரு ஆசை. நாளை காலைக்குள் நாலு கோடிப் பாடல்கள் வேண்டும் என்கிறார் மன்னர். அதையே அவையிலுள்ள புலவர்களுக்கு ஆணையாகப் பிறப்பித்து விடுகிறார். மன்னன் ஆணையாயிற்றே... அதுவும் நாலு கோடிப்பாடல்... நாளை காலைக்குள் நாலு கோடி பாடலா? நான் எங்கே போவேன்....எங்கே போவேன்... யாரிடம் போய் கேட்பேன்....ஐயோ... எனக்கு வேணும்...எனக்கு வேணும்... எனக்கு நல்லா வேணும். நாளைக்குள் ...