நினைவில் நிற்கும் ஆண்டு
நினைவில் நிற்கும் ஆண்டு காலம் நல்லதொரு ஆசிரியர். கற்க மறுத்தாலும் வலிந்து இந்தாப் பிடி என்று வலிந்து வந்து ஏதேதோ செய்திகளைச் சொல்லிச் செல்லும் ஏன் திணித்துச் செல்லும் என்றுதான் சொல்ல வேண்டும். படி படி என்று ஊட்ட முன் வந்து கையை நீட்டி நிற்கும். படிப்பதும் புறங்கையால் புறந் தள்ளிவிட்டு நான் பாட்டுக்குப் போவேன் என்பதும் அவரவர் விருப்பு வெறுப்பைச் சார்ந்தது. ஆனாலும் நாள்தோறும் ஏதோ ஒரு பாடத்தைப் புகட்டிச் செல்வது காலத்தின் கடமையாக இருந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பாடங்கள் பலவிதம். எல்லாப் பாடங்களிலும் எல்லோராலும் எளிதில் தேர்ச்சி பெற்றுவிட முடியாது. புரிந்து கொள்ள முடியாத முன்னுக்குப்பின் முரணான கடினமான நடையுடன் கூடிய பாடங்கள் இருக்கலாம்.எளிதாக புரிந்து கொள்ள க்கூடிய பாடங்கள் இருக்கலாம். புரிந்து கொண்டவன் புத்திசாலி. புரிந்தாலும் புரியாதவர்கள்போல கடந்து செல்பவர்கள்தான் பலர். யாருக்கோ வந்தது நமக்கென்ன என்று வாழ்பவர்களும் உண்டு. இதில் நாம் எந்த ரகம் என்று நமக்குள் சுய பரிசோதனை செய்து பார்ப்போம். 2025 கற்றுத் தந்தது என்ன? என்ன கற்று தந்தது ஞாபகம் இல்லையே சற்று...