மாத்திரை என்றால் என்ன?
மாத்திரை என்றால் என்ன? ஒரு சொல்லை ஒலிப்பதற்கு நாம் எடுத்துக்கொள்ளும் கால அளவு மாத்திரை எனப்படும். " கண் இமை நொடி என் அவ்வே மாத்திரை நுண்ணிதின் உயர்ந்தோர் கண்டலாறே " என்கிறது தொல்காப்பியம் " இயல்பெழு மாந்தர் இமை நொடி மாத்திரை " என்கிறது நன்னூல். மனிதர்கள் இயல்பாகக் கண் இமைப்பதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறோமோ அதுதான் மாத்திரையின் கால அளவு. மனிதர்கள் இயல்பாக கை நொடிக்கும் அதாவது சொடுக்கு போடுதல் என்று சொல்வோமே அதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறோமோ அதுதான் மாத்திரை. இயல்பெழு என்பதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். நோய்வாய்ப்பட்டவரல்ல. இயல்பாக நல்ல நிலையில் இருக்கும் ஒருவரின் கண்ணிமைக்கும் நேரம் அல்லது கை நொடிக்கும் நேரம் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். கால், அரை ஒன்று இரண்டு என்று மாத்திரை கணக்கிடப்படுகிறது. ஒரு மாத்திரை கால அளவு ஒலிக்கப்படக்கூடியவை உயிர்க்குறில் உயிர்மெய்க்குறில் ஆகிய குறில் எழுத்துகளுக்கு ஒரு மாத்திரை. உயிர் குறில் ஐந்து. அ ,இ, உ, எ ,ஒ இவை ஐந்தும் உயிர்க்குறில் எழுத்துகள். இவற்றிற்கு ஒர...