யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்...
யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்.... " யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு " குறள் : 127 யா _ எதை ,எவை காவார் _ காத்துக்கொள்ள மாட்டார் ஆயினும் _ ஆனாலும் நா _ நாக்கு காக்க _ காத்துக் கொள்க காவாக்கால் _ காத்துக் கொள்ளாவிட்டால் சோகாப்பர் _ துன்பம் அடைவர் சொல் _ மொழி , வாக்கு ,பேச்சு , இழுக்கு _ குற்றம் பட்டு _ உற்று , அகப்பட்டு எவற்றைக் காத்துக் கொள்ளாவிடினும் நாவினை மட்டுமாவது காத்துக் கொள்க. அப்படி காத்துக் கொள்ளாது போனால் சொற்குற்றத்தில் அகப்பட்டு துன்பம் அடைய நேரிடும். விளக்கம் : காக்கவேண்டியவை எவ்வளவோ உள்ளன. அவற்றை எல்லாம் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. ஆனால் அவற்றை எல்லாம் காக்காமல் போனாலும் பரவாயில்லை. நாவினை மட்டுமாவது காத்துக் கொள்ளுங்கள். ஒருமுறை நாவிலிருந்து...