ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின்....
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின்....! ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று குறள் : 967 ஒட்டார்- பகைவர்,வெறுப்பவர், அவமதிப்பவர் பின் -பின்னே சென்று-போய் ஒருவன் -ஒருவன் வாழ்க்கை -வாழ்வதைவிட அந்நிலையே -இருக்கும் நிலையிலேயே கெட்டான் - கெட்டுப் போனான் எனப்படுதல் - என்று சொல்லப்படுதல் நன்று -நன்மை தருவதாகும் தன்னோடு ஒட்டாது விலகிச் செல்லும் மனிதர்கள் பின்னால் சென்று வாழ்வதைவிட மானத்தோடு தற்போதுஇருக்கும் நிலையிலேயே கெட்டொழிந்தான் என்று சொல்லப்படுமானால் அதுவே அவனுக்கு நன்மை தருவதாகும். விளக்கம் : எவ்வளவுதான் நாம் நெருக்கமான உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் சிலர் தாமரை இலை நீர் போல ஒட்டாமல் விலகியே இருப்பர். அப்படி ஒட்டாதவர்களிடம் நாமாக வலியபோய் ஒட்ட நினைப்பது நமது தன்மானத்திற்கு இழுக்காகும். நம்மில் இருந்து விலகி இருக்க நினைப்பவரை அப்படியே விட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் நிலையில் இருந்து ஒருபோதும் கீழே இறங்கி...