Posts

Showing posts with the label கடைமடை- கவிதை - நினைவில் நான்

கடைமடை

Image
கடைமடை வானிலா ஒளி வரப்பின்மீது விழ கையில் லாந்தர் ஒளி காலுக்கு வழிகாட்ட கால்கடுக்கக் கடைமடைப் பயணம் ஓடையில் ஓடும்  சிறுமீன் கண்கள்  சிதறும் நிலவொளியில் மின்னிடும் தாரகையாய் மிரட்டி அழகூட்ட வரப்பைத் தாண்டி  குதிக்கும்  தவளை  கால்கள் மேல்  துள்ளிக் குதிக்க அச்சத்தில் நான் கால்கள் இடறி  கால்வாயில்  விழுந்த அந்தநாள் நினைவுகள் மெல்ல வந்து  சிரிக்க வைக்க நாணத்தால் முகம் கவிழ்ந்தேன் அவைதான் எத்துணை இனிய நாட்கள் அந்தநாள் நினைவுகளில் என்னைத் தொலைத்தேன் சிள்வண்டு சுற்றி  சுற்றி வந்து கண் காணாக் காட்சியாகி நின்றன. உள்ளேன் ஐயா என்ற சில்லென்று மெல்லொலி  மறுபடியும் மறுபடியும் காதோரம் கவிபாட அச்சமும் உவகை கலந்த மெய்ம்மயக்கத்தில் நான் ஒற்றைப் பறவையின் சிறகடிப்பு  தன் இருப்பை அறிவித்து மெல்ல அச்சமூட்டி கடக்க இந்த நேரத்தில் யாரவர் பறவைகளின் அமைதியைக் கலங்கடித்தது என்ற ஆராய்ச்சியில் மனம் யாருல அங்கே என் மடையை அடைத்தது என்ற பக்கத்துத் தோட்டத்து மாமாவின் குரல் வான்வழி வந்து வரப்போரம் ஆள் அனக்கம் இருக்கிறது அச்சம் தவிர்  என்று ...