Posts

Showing posts with the label நின்னினும் நல்லன் - வெண்ணிக்குயத்தியார்

தோற்றவர் வென்றவர் ஆவரோ

வெற்றி பெற்றவரைத் கொண்டாடும் உலகு தோற்றவரைக் கண்டு கொள்வதில்லை. ஆனால் தோல்வியைத் தழுவாமல் வெற்றி பெற்றவர் எவரும் உண்டோ என்றால் அதுவும் இல்லை. பலமுறை தோற்று எழுந்து வந்து வரலாற்றில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர்கள் உண்டு. தோற்கலாம். தப்பில்லை. ஆனால் அந்தத் தோல்வியும் புறமுதுகிட்டு ஓடும்படியாக இருக்கக்கூடாது. வீழ்ந்தாலும் மறுபடியும் எழுந்து நிற்பேன் என்ற என்ற தன்னம்பிக்கை இருப்பவர்களுக்கு வீழ்வது ஒரு  சாதாரண நிகழ்வு. மறுபடியும் எழும்பி புது உற்சாகத்தோடு களம் காண்பர். ஆனால் இங்கு ஒருவர் போரில் தோற்று விட்டார். புறமுதுகில் விழுப்புண். ஏன் புறமுதுகிட்டு ஓடிவிட்டாரா என்பீர்கள். அதுதான் இல்லை. மார்பில் தைய்த்த அம்பு புறமுதுகு வழியாக வெளியே வந்துவிட்டது. இப்போது புறமுதுகிலும் காயம். வீரனுக்கு அழகு மார்பில் விழுப்புண்  ஏற்பட்டு மாண்டு போவது. ஆனால் இந்த மன்னன் நல்லவீரன். அவனுக்கு புறமுதுகிலும் விழுப்புண் ஏற்பட்டுவிட்டது. தாங்கிக் கொள்ள முடியவில்லை. மானம் போய்விட்டதாக உணர்ந்தான். அப்படியே வடக்கிருந்து உயிரை விட்டுவிட்டான். வெற்றியைக் கொண்டாடும் உலகில்  தோற்றவரைக் கொண்டாடவும் ஒரு ஆள்...