அறனோக்கி ஆற்றுங்கொல் வையம்....
அறனோக்கி ஆற்றுங்கொல் வையம்..... " அறனோக்கி ஆற்றுங்கொல் வையம் புறனோக்கி புன்சொல் உரைப்பான் பொறை" குறள் : 189 அறம்- நல்வினை நோக்கி - கருதி ஆற்றுங்கொல் - தாங்குகிறதோ வையம் -உலகம் புறன் - புறத்தே நோக்கி - பார்த்து புன்சொல்- இழிவான பேச்சு உரைப்பான் - சொல்லுபவன் பொறை -தாங்குதல்,சுமத்தல் ஒருவன் இல்லாதபோது அவனைப்பற்றி இழிவாகப் பேசுபவனை இந்த நிலமானது தாங்கிக் கொள்வது என்பது இவனையும் சுமப்பது எனக்கு அறம் என்று கருதியோ? விளக்கம் : முன்னொன்று பேசி புறமொன்று பேசும் இழிவான செயல் சிலரிடம் இருக்கும். அதனை அவர்கள் தவறாகக் கருதுவதே இல்லை. ஆனால் அது எவ்வளவு பெரிய இழிவானச் செயல் என்பதை இந்தக் குறள் கூறுகிறது பாருங்கள். ஒருவன் இல்லாதபோது அவனைப்பற்றி அவதூறாகப் பேசுதல் இழிவு. அறத்திற்குப் புறம்பான செயல். இப்படி ஒருவன் அறத்திற்குப் புறம்பான செயலைச் செய்கிறான். அவனையும் இந்த உலகம் தாங்கிக் கொள்கிறது என்றால் அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? சற்று சிந்திக்க வேண்டிய செயல்தான். இந்தப் பூமியானது அகழ்வாரையும் தாங்கும் ...