உலக பிராத்தனை தினம்
உலக பிராத்தனை தினம் மார்ச் மாதம் முதலாம் வெள்ளி உலக பிராத்தனை தினம். இது உலகெங்கும் உள்ள கிறிஸ்தவப் பெண்களால் நடத்தப்படும் ஒரு இயக்கமாக செயல்படுகிறது.. பிராத்தனை செய்வதன் நோக்கம் என்ன? பிரார்த்தனையால் என்ன கிடைக்கும் என்ற கேள்விகள் உண்டு. பிராத்தனை மனித மனதை இலகுவாக்குகிறது. இன்றையச் சூழலில் அனைவரும் ஏதோ ஒரு பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வீட்டில் ...பணியிடங்களில்... அக்கம்பக்கத்தில்.... சமுதாயத்தில் என்று நாலாப்பக்கங்களிலிருந்தும் சிக்கல்கள் வந்து சூழ்ந்து கொள்ளும்போது அதிலிருந்து விடுபடுவது எப்படி? யாராவது ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லிவிட மாட்டார்களா என்று மனம் ஆலாய்ப் பறக்கும்.....ஆறுதலைத் தேடும். அப்படி ஆறுதலுக்காக இறைவனிடம் போய் நிற்கிறோம். அல்லது பிரார்த்தனைக் குழுக்களிடம் சென்று பிராத்தனை செய்கிறோம். தனிமையில் பிராத்தனை செய்வதைவிட இரண்டுபேர் மூன்றுபேர் சேர்ந்து குழுவாகச் பிராத்தனை செய்தால் நாம் விரும்பியது நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும் மன அமைதி: நமது மன அமைதிக்கான வடிகாலாக அமைந்திருப்பதுதான் பிரார்த்தனைக் மையங...