மதிப்புப் பன்மை என்றால் என்ன ?
மதிப்புப் பன்மை என்றால் என்ன மதிப்பும் மரியாதையும் மனசில் இருந்தால் போதும். வார்த்தையில் வேண்டாம். எங்கோ ....யாரோ சொன்ன ஞாபகம். அப்படியானால் பேசும்போது மரியாதை கொடுத்துப் பேச வேண்டாமா? அது எப்படி ? பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்துப் பேசுவதுதானே நமது பண்பாடு. மரியாதை கொடுத்துப் பேச வேண்டுமானால் எப்படி பேச வேண்டும்? வாருங்கள். உட்காருங்கள் உண்ணுங்கள் பருகுங்கள் என்று கள் சேர்த்துச் சொல்வதுதானே மரியாதை! ஆனால் அது இலக்கணப்படி தவறாகுமே! ' கள்' என்ற விகுதி பற்றி பல்வேறு விவாதங்கள் உண்டு. இன்றும் இந்த விவாதம் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது. . ' கள் 'என்பது அஃறிணை பலலின் பால் விகுதி அல்லவா? அது உயர்திணைக்கு எப்படி பொருந்தும்? கேள்வி எழலாம். முதலாவது மதிப்புப் பன்மை என்றால் என்ன என்று பார்ப்போம். ஆரம்பத்தில் இருந்தே வருவோம். திணை இரண்டு வகைப்படும். 1. உயர்திணை 2. அஃறிணை இதில், "மக்கள் தேவர் நரகர் உயர்திணை மற்றுஉயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை" என்கிறது நன்னூல். மக்கள், தேவர் , நரகர் - உயர்திணை ஏனைய உயிர்களும் உயிர் அல்லாத பொருட்கள் அனைத்தும் அஃற...