குலோத்துங்கச் சோழனுக்குப் பாடம் சொன்ன ஔவை
குலோத்துங்கச் சோழனுக்குப் பாடம் சொன்ன ஔவை ஔவையின் மீது அரசர்களுக்கு எல்லாம் நல்ல மரியாதை உண்டு. ஔவையிடம் பேச தனிக்கவனம் வேண்டும். ஏடாகூடாவாக எதையாவது சொல்லி மாட்டிக் கொண்டு விழித்த கதைகள் ஏராளம் உண்டு. எந்தப் பக்கம் நின்று பேசினாலும் எதிர்ப்பக்கம் நின்று கோல் அடித்துவிட்டு போய்க் கொண்டே இருப்பார். படைப்பாளிகள் ,கலைஞர்கள் என்று எல்லா தரப்பினரிடமும் எப்போதும் ஏதோ ஒருவிதமான ஒரு போட்டி மனப்பான்மை இருந்துகொண்டே இருக்கும். தங்களை விஞ்சிய ஆள் இருந்துவிடக்கூடாது என்ற மனநிலை இருக்கும். தங்கள் படைப்பின் மீது ஒரு கர்வம் இருக்கும். அனைவருமே தங்களுக்கு போதிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பு. ஆனால் படைப்பாளிகள் அனைவருக்கும் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் பெரும்பான்மையான படைப்பாளிகளிடமிருந்து வரும் பதிலாக இருக்கும். அவர்கள் படைப்பில் தரம் இருக்கலாம். ஆனால் அவற்றை வெளியில் கொண்டு சேர்க்கும் வழிமுறைகள் சரியாக இல்லாமையால் அவர்கள் திறமை உலகுக்குத் தெரியாமலேயே இருந்துவிடும். விளம்பரங்களும் விளம்பரப்படுத்த ஆட்களும் இருந்தால் மட்டுமே ஒருவரை அறிவாளி...