ஆசிரியர்கள் சங்கமம்
ஆசிரியர்கள் சங்கமம் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் வணக்கம். இப்படியொரு மகிழ்ச்சியான தருணத்தில் தங்கள் அனைவரையும் பார்த்துப் பேசி மகிழ்ச்சியைப் பறிமாறிக்கொள்ள வாய்ப்பளித்த விழா குழுவினருக்கு முதலாவது வணக்கமும் வாழ்த்தும் சொல்லி மகிழ்கின்றேன் ஓய்வும் பணியும் ஓரிடத்தில் கூடுகை உவகையால் உள்ளத்தில் ஒலித்ததோர் பேரிகை மகிழ்ச்சியால் மனதில் எழும்பியது ஓர் ஆனந்த மாளிகை பணி செய்த நாட்கள் அணிசெய் நிகழ்வுகள் நனிமிகு உரையாடல்கள் கவின்மிகு காட்சிகளாய்க் கண்முன் விரிகின்றன கதைபேசி மகிழ்கின்றன கவிதைகளாய் சத்தமில்லாமல் முத்தமிட்டு உவக்க வைக்கின்றன மலரும் நினைவுகளில் மனதை பறிகொடுக்க வைத்து மகிழ்ச்சியாய்க் கும்மாளமிடுகின்றன கண்கள் நல்விசாரிப்பு நடத்த உதடுகள் மெல்ல ஒத்திகை நடத்தி ஒய்யாரப் புன்னகையை உள்ளங்களோடு பரிமாற்றம் செய்கின்றன உப்பரிகையில் நின்று ஒய்யாரமாய் உலகைக் காணும் தேவதையின் மனநிலையில் கால்கள் தரையில் ஊன்ற மறுக்கின்றன எண்ணங்கள் வண்ணக் கொடிபிடித்து களிற்றின்மேல் ஏறி அணிவகுப்பு நடத்துகின்றன ஏனிந்த மகிழ்ச்சி? எதற்காக இந்த...