Posts

Showing posts with the label kinnip petti

கிண்ணிப் பெட்டியும் மிட்டாய்ப் பெட்டியும்

Image
    கிண்ணிப்பெட்டியும் மிட்டாய்ப் பெட்டியும் கிண்ணிப் பெட்டி என்றதும் ஏன் கிண்கிணியென சிரிக்கிறீர்கள்? கிண்ணிப் பெட்டி தெரியாதா? அட போங்கங்க... பர்கரைக் கையில் வைத்துக் கடித்துக் கொண்டே அலுவலகம் செல்கிறவர்களா நீங்கள்? பாதி சுவை  தெரியாமலேயே வாழ்ந்துவிட்டீர்கள் . " உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி..." என்ற கண்ணதாசன் பாடலைப்பாடி புலம்புவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. நீங்கள் கிண்ணிப்பெட்டி  பார்த்திருக்க வாய்பில்லைதான். சிற்றூர்களில்  இருப்பவர்களே கிண்ணிப்பெட்டியை மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மும்பை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் நீங்கள் பார்த்திருக்கவா முடியும்? அது என்னங்க கிண்ணிப் பெட்டி... என்று நீங்கள் கேட்பது  என் காதுகளில் விழத்தான் செய்கிறது.    நீங்கள் கிண்ணிப் பெட்டி என்ற சொல்லுக்கே   கூகுளில் பொருள் தேடும் நவீன கால  மனிதர்கள்.  உங்களிடம் கிண்ணிப்பெட்டி...கிண்ணிப்  பெட்டி  என்று கிண்ணரம்  வாசிக்கிறேன். ...